பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/438

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முற்றிலும் கருத்துவேறுபாடு கொண்டவர்களின் மேடைகளிலும் போய்க் கலந்து கொண்டு அவர்களின் பொல்லாப்பை ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன்-இப்படிச் சொல்லுவதைவிட நான் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. இப்படி எல்லா மேடைகளுக்கும் கூச்சமின்றிச் செல்லுகிற வாய்ப்பை ஆண்டவன் எனக்கு எந்த வழியோ அருளிச் செய்திருக்கிறார். ஆனால், அருள் நெறித் திருக்கூட்டத்தினர் அச்சப்படுகின்றனர்- கூச்சப்படுகின்றனர் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் வள்ளலாரின் நெறி மட்டுமின்றி, வள்ளலாருக்கு முன்னமேயே வள்ளலாராலேயே பாராட்டப் பெற்ற பெருமக்களின் நெறியையும் ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தக் கொள்கையோடுதான் அருள்நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றது. வள்ளலாரின் நெறியோடு, அப்பரடிகள், மாணிக்கவாசகர் போன்றவர்களின் நெறியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அருள்நெறித் திருக்கூட்டத்தின் அடிப்படைக் கொள்கை. சன்மார்க்க நெறியினர் காலப்போக்கில் உருவ வழிபாடு திருக்கோயில் வழிபாடு போன்றவைகளில் நம்பிக்கையின்றித் தனியே ஒரு மடம் கட்டி, தனியே ஒரு ஜோதி வைத்து வழிபடும் உணர்வுடையவர்களாக ஆகிவிட்டமையின் காரணமாகத் திருக்கோயில்களைப் பேணிப் பாதுகாக்க முடியாமற் போய்விடுமோ என்ற அச்சம் சிற்சில இடங்களில் அருள் நெறித் திருக் கூட்டத்தினர்க்கு இருக்கிறது. அந்த அச்சத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்டு என்று சொல்லிக் கொள்ள விரும்புறேன்.

“கந்த கோட்டத்துள் தலமோங்கு கந்தவேளே” என்று கூறும் வள்ளலாருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை கிடையாது என்று கூறிவிட முடியாது. அதை அவர் முழுக்க ஏற்றாரா இல்லையா என்பது வேறு. எனினும் திருவுருவ வழிபாடு,