பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/440

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நமக்கெல்லாம் இராமலிங்கர் மீது பக்திதானே! அவர் மீது பக்தியும், பாசமும் கொண்டுதானே நாம் இங்கே கூடியிருக்கிறோம். அவர்மீது காகிதப் பூவைப் போட்டால் அது போலிதானே! அவர் திருவுருவப் படத்தை அலங்கரிக்கும் தேரில் காகிதப் பூவைப் போட்டால் அது எதைக் காட்டும்? நாம் இன்னும் மணமிக்கவர்களாக ஆகவில்லை என்பதைத்தானே? வழிபாட்டில்-வழிபாட்டு நிகழ்ச்சிகளில் - வீட்டு நிகழ்ச்சிகளில் மணமிக்க மலர்களையும் பயன்படுத்துவது ஏன்? மனிதனின் உள்ளுணர்வு மணமிக்க மலர்போல பூத்து, மலர்ந்து மணம் வீசவேண்டும் என்பதன் அறிகுறியாகத் தானே? கையிலே மலர்க் கொத்து (Bouquet) கொடுக்கிறோமென்றால், கையிலே இருக்கிற மலர்போல உள்ள மலரும் மணம் வீசவேண்டும் என்பதற்காகத்தானே? இப்படிச் செயலால் உணர்த்துவது (Practical Study) செய்முறைப் படிப்பு. பல ஆண்டுகட்கு முன்பே மதம் இந்தச் செய்முறைப் படிப்பை நடைமுறைக்குக் கொணர்ந்தது.

இன்று, திருமண வீட்டிலே பூ கொடுக்கிறோம்.

“இந்த மலரைக் கொடுக்கிறேன்; மலர், மணமும் இனிமையும், தண்மையும் மகிழ்ச்சியும் தருவதுபோல, உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உறவிலே மணம், இனிமை, தண்மை, மகிழ்ச்சி, கவர்ச்சி எல்லாம் இருக்கட்டும் என்பதற்காகத்தான். இப்பொழுது கொடுக்கப் பெறுகிற துலுக்கன் செவந்திப் பூவின் மணம் போல உங்கட்கும் எனக்கும் உறவு இருக்கட்டும் என்றால், அது நடைமுறைக்கு ஒத்து வருமா?

விருந்தினர்க்கு மாலை போடுவது சடங்கு. அந்த மாலையைப் பெற்றுக் கொள்ளுகிறவர் ‘உங்கள் அன்பை - உறவைக் கண்ணின் இமை போலக் காப்பாற்றுகிறேன்’ என்பதன் அடையாளமாக-மரியாதையாகக் கண்ணில் ஒற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அணிவிக்கப் பெறுகிற மாலையைக் கண்ணிலே ஒற்றினால், மாலையில்