பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்தம் விருப்பப்படி நீட்டிக்கொண்டு போகமுடியாது. மரணத்தை ஒத்திப்போட முடியாது!

மனித உடம்பு பச்சை மண்பானை போலவும் கண்ணாடி வளையல் போலவும் உடைந்து போகக் கூடியது; நிலையில்லாதது! அதனால் புத்திசாலித்தனமாக நிலையில்லாதனவற்றைக் கொண்டு நிலையானவற்றைச் செய்து கொள்ளவேண்டும்.

வாழ்வு ஆற்று நீரைப்போல ஓடி ஓடிக் கழிந்து போவது. வாழ்க்கையை நடைமுறையில்-பேச்சு வழக்கில் வளர்வது போலப் பேசுகிறார்கள்; அதாவது பிறந்த குழந்தை வளர்கிறது; ஒரு வயது; இரண்டு-வயது என்று வாழ்க்கையின் காலம் எண்ணப்படுகிறது. இந்த எண்கள் அளவில் ஏறுமுகம்தான்!

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? வரையறுத்த, வாழ்நாள் காலம் கழிய கழிய, குறைந்துகொண்டே வருகிறது. ஜனவரி மாதம் தேதி நாட்காட்டி கனமானதுதான்! பன்னிரண்டாவது மாதம்-டிசம்பர் மாதம் அந்த நாட்காட்டி இளைத்து விடுகிறது. டிசம்பர் 31 முடிந்ததும் நாட்காட்டியில் நாள் சீட்டு இல்லை. அட்டை மட்டுமே இருக்கிறது. அதுபோலத்தான் மானுட வாழ்க்கையில் வாழ்நாள் கடைசியில் அட்டை மட்டுமே இருக்கிறது. பொய்யோ பெருகி வளர்கிறது.

தலை, மூளையின் இருப்பிடம்! மூளை இயங்க இயங்கத்தான் உருவாகும்; செயற்படும். மூளை பயன்படுத்தப் பெறாவிடில் மூளை இருந்தும் இல்லாததைப் போலத்தான்! மூளை பயன்படுத்தப்படவில்லையாயின் வெறும் தலையே இருக்கும்.

தசையும் நிணமும் உள்ளதலை உயிர்ப்பில்லாத சதை. அந்தச் சதையில் புழுக்கள் வைக்கப்பெறும். வாழ்க்கையை வாழ்க்கையின் அருமையை அறிந்து அறிந்து பயன்படுத்தாத