பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இப்பாடலில் “வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி, மலர்க் கழல்கள். அவை காட்டி” என்ற தொடர் மாணிக்கவாசகரின் கடவுட் காட்சியை-அவர் கடவுளைக் கண்டு அனுபவித்த காட்சியை விளக்குகிறது.

ஆட்கொண்டருளிய பாங்கு

மாணிக்கவாசகரை எம்பெருமான் ஆட்கொண்டருளினான். ஆட்கொண்டருளியதன் பயன் என்ன? “இறைவன் ஆண்டான்” “மாணிக்கவாசகர் அடிமை என்று இந்த உலகம் கூறட்டும்” என்பது.

“பவன் எம்பிரான் பணி மாமதிக் கண்ணிவிண் -
ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண் டான்என்
சிறுமை கண்டும்
அவன் என்பிரான் என்ன நான்அடி யேன்என்ன
இப்பரிசே
புவன் எம்பிரான்தெரி யும்பரி சாவ
தியம் புகவே

(திருச்சதகம்-9)

என்று அறிவிக்கின்றார். ஆதலால், மாணிக்கவாசகர் வீடு வேண்டி நின்றாரில்லை என்பது புலனாகிறது. அடிமைத் திறம் பூண்டு தொண்டு செய்தலிலேயே அவருக்கு நாட்டம்.

இறைவன், மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளிய பாங்கு பற்றிய திருவாசகப் பாடல் பலகாலும் படிக்கத்தக்கது; நினைந்து நினைந்து படித்துணர வேண்டிய பாடல்.

புறம் புறம் திரிந்த செல்வம்!

“கடவுள் அடிக்கடி உலகத்திற்கு வர இயலாமையின் காரணமாகத் தாயைப் படைத்தான்” என்று ஆன்றோர் வழக்கு ஒன்றுண்டு. ஆம்! தாய் ஓர் ஆன்மாவுக்குச் செய்யும் உதவி பெரியது! அளப்பரியது! உணவு எடுத்துண்ண