பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

43


படாதிருக்கவும், அவ்வழித் திருவாசகம் கிடைக்கவும் இறைவன் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கள் பல!

இறைவன் குதிரைச் சேவகனாகும் நிலை, நரியைப் பரியாக்கும் கடமை, பின் பரிகளை நரிகளாக்கும் திருவிளையாடல், மண் சுமத்தல், புண் சுமத்தல் - இத்தனையும் மாணிக்கவாசகரின் திருவருள் சார்ந்த அனுபவம் இடையீடுபடாமல் இருப்பதற்காகவே யாம் என்பதை எண்ணினால் “புறம் புறம் திரிந்த செல்வ”மாகிய இறைவன் திருவாசகத்தின் இலக்கியம் என்பது புலனாகிறது.

இறைவன் தாயிற் சிறந்தவன்; உயிர்களுக்கு நிலையாக நின்றருள்பவன்.

இந்தப் பாடலுக்குச் சமூக இயல், நிர்வாக இயல் அடிப்படையிலும் பொருள் காணலாம். மனித உலகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், தாழ்ந்த நிலையில் வாழ்வோர் எண்ணிக்கையே மிகுதி. அறியாமை, வறுமை இவர்களுடைய வழிவழிச் சொத்துக்கள்! அச்சமும் அடிமைப் புத்தியும் இவர்களை ஆட்கொண்டுள்ளன. இவர்களுக்கு எப்போது கடைத்தேற்றம்?

ரஸ்கின் என்ற சிந்தனையாளர் “Un to the last” என்று கூறினார். அதாவது கடையனுக்கும் கடைத் தேற்றம் என்பதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார். இந்த உலகில் இலர் பலர் ஆயினர் ஏன்?

நோன்பு என்றால் என்ன? உண்ணா நோன்பா? உறங்காத நோன்பா? அல்லது பலகாலும் நீராடுதலா? தரையில் படுத்தலா? இவையெல்லாம் நோன்பா? இல்லையா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். “விரதம் எல்லாம் மாண்ட மனத்தான்” என்ற தேவாரத்தின் வழி சிந்தனை செய்யுங்கள்! முடிவு, தலைப்படும்.

புறநானூறு, நோன்பு என்று போற்றுவது எதனை? தனக்கென முயலாது பிறருக்கென முயலும் மாந்தர்