பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

49


மனத்துணையே யென்தன் வாழ்முத
லேயெனக் கெய்ப்பில் வைப்பே
தினைத் துணை யேனும் பொறேன் துயர்
ஆக்கையின் திண்வ லையே!

(நீத்தல் விண்ணப்பம்-39)

என்பது திருவாசகம்.

மந்திரப் பாடல்

மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பெற்ற நிலையில் அம்மை, அப்பனுள்ளும்; அப்பன், அம்மையுள்ளும் இருப்பதை எண்ணி உள்ளம் நெகிழ்கின்றார். அம்மையும் அப்பனுமாகிய நீவிர் இருவீரும் என்னுள்ளத்தில் இருத்தல் வேண்டும் என்று வேண்டுகின்றார். இது ஐந்தெழுத்தின் விளக்கம். “சிவயசிவ” என்பது விளக்ககம்.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீ யிருத்தி
அடியேன் நடுவுள் இருவிரும்
இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப்புரி யாய் பொன் னம்பலத் தெம்
முடியா முதலே என் கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே!

(கோயில் மூத்த திருப்பதிகம்-1)

என்பது மணிவாசகம்.

“சிவயசிவ” - என்பது மீதுண்மை - அதிசூக்கும ஐந்தெழுத்து. இப்பாடலின் இருபுறமும் “உடையாள்” என்று சொல்வது அமைந்துள்ளது. ஆன்மாவைக் குறிக்கும் “ய” நடுவணதாகவும் இரண்டு புறமும் சிவசக்திகள் இருப்பதன் அருமைப்பாட்டையும் உணர்க. ஆன்மாவாகிய “ய” -விற்கு