பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

87


உன்னை நினைந்தே கழியும்என் ஆவி
கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய் என் பிரான் உன்னை
வேண்டியதே!

என்று இரந்து வேண்டுகிறார். அதாவது நினைக்கும் தகுதியுடைய மானிடப் பிறப்பில் உள்ளவரை இறைவா, உன்னை நினைப்பேன்! ஒருகால் மானிடப் பிறவியை இழந்து நினைத்தற்கு வாய்ப்பில்லாத புழுப் பிறப்பை அடையின் இறைவா, நீ என்னை மறக்கக்கூடாது என்று வேண்டுவதறிக. ஆதலால் பிறப்பை அறிந்து ஆன்மா தகுதிப்பாடுறுதல் வரை சுற்றும் என்பதறிக.

இறைவனின் கருணையே உயிர்களின் பயணத் தொடக்கத்திற்குக் காரணம். பயணங்கள் நிகழ்வதற்கும் மாறுவதற்கும் முற்றுப்பெறுவதற்கும் ஆன்மாவின் வாழ்நிலையே காரணம். ஒரு ஆன்மா மானுட நிலையை எய்துதலே கூடிப் பல பிறவிகளுக்குப் பிறகுதான்! பலப்பல இடர்ப்பாடுகளுக்கும் பிறகுதான்! மனிதன் மிருகமும் அல்லன்; தெய்வமும் அல்லன், மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி, மானுடத் தகுதியைப் பெற்று மெய்மை நிலையையும் தெய்வத் தன்மையையும் அடைதலே ஆன்மாவின் பயணக் குறிக்கோள்; பயன்! மாணிக்கவாசகரிடம் ஆன்ம வளர்ச்சிக்குரிய தகுதியின்மைகளுக்குக் கழிவிரக்கம் கொள்ளல், ஆராக் காதலுடன் உண்மையை நாடுதல், இறைவனைத் தேடுதல், முதலிய தகுதிகள் அமைந்திருக்கின்றன. தகுதியில்லாதார் தகுதி நோக்கி-வளர்தலே வாழ்வு.

இறைவழிபாட்டின் நோக்கமே தகுதிப்பாடுறுதல் என்பதுதான். வட்டம் வரைய வேண்டுமாயின் காம்பஸ் தேவை. காம்பஸில் நீண்ட முனையை ஊன்றி, சிறிய முனையில் எழுதுகோலைப் பொருத்தி வட்டமிடுகிறோம். இப்படி வரையப்பெறும் வட்டம் கோணல் இல்லாமல்