பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

95


ஒழுகினான். மாறவர்மன் அரிகேசரிக்கு, குலச்சிறையார் முதலமைச்சராக விளங்கினார்.

குலச்சிறையார்

குலச்சிறையார் பாண்டிய நாட்டின் வடகிழக்கு எல்லையில் உள்ள மணமேற்குடி என்ற சிற்றுாரில் பிறந்து வளர்ந்தவர்.


"பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச்
செந்நெ லார்வயல் தீங்கரும் பின்அயல்
துன்னு பூகம் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி
அப்பதிக்கு முதல்வர்மன் தொண்டர் தாம்
ஒப்பரும் "பெருநம்பி” என் றோதிய
செப்பரும் சீர்க்குலச் சிறையார்”

என்று சேக்கிழார் பெருமானும்,

"அருந்தமி ழாகரன் வாதில் அமணைக் கழுதுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்.எழில்
சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்னதி காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற் குடியன் குலச்சிறையே"

என்று நம்பியாண்டர் நம்பிகளும் பாடியிருப்பதால் அறிக. குலச்சிறையாரின் தந்தை தாய் பற்றிய சிறப்பான வரலாற்றுக் குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. ஆதலால் குலச்சிறை நாயனாருக்கு வாய்த்த அமைச்சுப் பொறுப்பு வழிவழி வந்ததன்று தகுதியின் பாற்பட்டது. நாட்டின் குடிமக்களில் தகுதியுடையோரை அமைச்சராகத் தேர்ந்தெடுப்பது என்ற பாண்டிய அரசின் மரபு நினைவுக்குரியது.