பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

109



சேக்கிழாரின் காப்பிய நிகழ்வுகள் நிகழ்ந்த காலத்திலிருந்த சமுதாயச் சூழல்கள். சேக்கிழார் காலச் சூழல்கள் இவையனைத்தையும் நினைவிற்கொண்டு சேக்கிழார் காப்பியத்தைக் கற்றால்தான்் அதன் அருமைப்பாடு விளங்கும். -

சேக்கிழார் செந்தமிழ் நாட்டு மரபினை அரண் செய்யும் குறிக்கோளோடு நூல் இயற்றினார். ஞாலமளந்த மேன்மை தெய்வத்தமிழின் புகழ் பர்ப்பும் பணி! திரு நெறிய தொண்டின் நெறி நிற்கும் குறிக்கோள்! வழி வழி வந்த அகனைத்தினை வாழ்க்கையில் மக்களை நின்றொழுகச் செய்தல்: தமிழ்ச் சமுதாயத்தின் மையமென விளங்கிய திருக்கோயில்களைப் பேணுதல், தமிழிசையைப் பேணுதல் இயற்கையோடிசைந்த இறை நலம் சார்ந்த வாழ்க்கை நெறியைக் காணல்! அன்பு நலம் பாராட்டுதல் இவை யனைத்தும் சேக்கிழார் காப்பியத்தின் குறிக் கோளாகும்!

திருஞானசம்பந்தர் காலச்சூழல்

சேக்கிழார், திருஞானசம்பந்தரின் திருவவதாரத்தை விளக்கும் பொழுது, "அசைவில் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறைவெல்ல" திருவவதாரம் செய்தார் என்று அருளிச் செய்கின்றார், திருஞானசம்பந்தர் அவருடைய பெற்றோரின் பெருந்தவத்தின் பயனாகப் பிறந்தவர். திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்யும் சூழ்நிலையை, "மனையறத்தில் இன்பமுறு மகப்பெறுவான் விரும்புவார் அனையநிலை தணைநின்றே ஆடியசே வடிக்கமலம் நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும் புனை மணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம் புரிந்தார். (பெரியபுராணம்-திருஞானசம்பந்தர் பா-19) என்ற சேக்கிழார் பாடலின் வாயிலாக அறியலாம். அதாவது திருஞான சம்பந்தர் திருவவதாரம் செய்வதற்கு முன்பே தமிழகத்தைத்