பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கைக்கு அழகு! வணங்குதல் வளம் சேர்க்கும்! வணங்கிய வாயே வையகத்தை வளர்க்கும்; ஒருங்கிணைக்கும்! வணங்கி வாழ்தலே திருவருட்சார்புடைய வாழ்க்கைக்கு வாயில்! இதோ சேக்கிழாரின் செஞ்சொற் கவிதை!

"பக்தியின் பாலராகிப் பரமனுக்குக் காளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு
மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி
மற்றை
வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலியெல்லாம்


(பெரிய புராணம்-திருநாட்டுச் சிறப்பு-22)


மேலும்,

பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சம் என்ன இருண்டது நீண்டவான்"


(பெரியபுராணம்-தடுத்தாட்கொண்ட புராணம் பா 159)


"தோற்றும் மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய்
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீணிலா"


(பெரியபுராணம்-தடுத்தாட்கொண்ட புராணம் பா-162)


என்ற பாடல்களில் இயற்கையின் நிகழ்வுகளை இறை நெறியோடு ஒப்பு நோக்கிக் கண்டு நன்னெறி உணர்த்தும் பாங்கினை அறிக.