பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

125



இவ்வுலக இன்பம் திருவருள் இன்பத்திற்கு இட்டுச் செல்வது

உலக வழக்கில்-ஒரூருக்குச் செல்லும் வண்டியை அந்த ஊரைச் சொல்லி அழைப்பது வழக்கம். இராமேசுவரம் விரைவு வண்டியை "இராமேசுவரம்" என்றழைப்பார். அந்த வண்டி இராமேசுவரம் அல்ல. இராமேசுவரத்திற்கு அந்த வண்டி கொண்டு விடும் என்ற பொருளின் அடிப்படையில் உபசார வழக்காக அது இராமேசுவரம் என்று கூறப்பெறுகிறது. அது போல, உயிர் இந்த உலகில் துய்த்து மகிழும் இன்பங்கள் இன்பமல்ல. ஆனால் இந்த இன்பங்கள் முறையாகத் துய்க்கப் பெற்று அவாத் தணியும் பொழுது திருவருளின்பம் சிந்திக்கும். அதனால் உபசார வழக்காக இதையே திருவருளின்பம் போல உபசரித்துக் கூறுதல் மரபு. இவ்வுலக இன்பங்கள் திருவருளின்பம் அல்ல என்று கூறுவதால் அயல் வழக்கினர் போல் இவ்வுலக இன்பம் தவறானது முறைகேடானது; இறைவன் திருவுள்ளத்திற்கு மாறானது என்பது கருத்தன்று. ஓர் ஆன்மாவின் வளர்ச்சியில் அவ்வக்காலத்தில் நுகரும் இன்பங்கள் வளர்ச்சிக்குத் துணை செய்வன. திருவருள் இன்ப அன்புக்கு ஆற்றுப் படுத்துவன, அழைத்துச் செல்வன என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்த நிரந்தினிது முறையைச் சுந்தரர்,

"பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை"

(திருமுறை 7-59-)


என்று பாடியதால் அறிக.

பொன்-மூலப்பொருள், பொருள்-நுகர்தலுக்குரிய பொருள். போகம்-நுகர்தலால் வரும் இன்பம், இவை மூன்றும் இறைவனால் ஆன்மாக்களுக்குத் தரப்படுகின்றன. திருவருள் சேர்ப்பிக்கப் பெறுகிறது. அதாவது புணர்த்தப் பெறுகிறது. தருதல்-புணர்தல் என்ற சொற்கள் இடம் நோக்கி