பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

131



திருக்கோயில்கள் சமுதாய மையங்கள்


சேக்கிழார் காப்பியம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டே இயங்குகிறது. செழுந்தமிழ் வழக்கின் மையம் திருக்கோயில்களே! தமிழர் சமுதாய அமைப்பும் நிகழ்வும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டவை. கடல் கொண்ட தென்குமரிக் கண்டத்தில் மிகப்பெரிய திருக்கோயில் இருந்ததைப் புறநானூறு கூறகிறது. அந்தத் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவன் திருமுன்னால் பேரரசர்களின் குடைகள் தாழ்ந்தன. இதுவே செழுந்தமிழ் வழக்கு.

"பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

(புறம்-6)


என்பது புறநானூறு. திருக்கோயில் நாகரிகம் தமிழ் நாகரிகம்; தமிழ் நாகரிகத்தின் பண்ணைகள் திருக்கோயில்கள். செழுந்தமிழ் வழக்குக்கு அரணாகவுள்ள திருக்கோயில்களைத் தமிழ் மக்கள் என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத் திருக்கோயில் தொண்டுகளைச் சேக்கிழார் சிறப்புற விளக்கியுள்ளார். ஏன்? சேக்கிழாரே தமது வாழ்க்கையின் இலட்சியமாக, செஞ்சொற்காப்பியமாகத் திருத்தொண்டர் வரலாறும் செய்தருளினார். அதுபோலவே இறைவனும் சிவனடியார்களும் மற்றைய சமுதாயமும் மகிழ்ந்து வாழ்வதற்குத் துணை செய்யும் திருக்கோயிலை எடுப்பித்தல், பேணுதல் அறங்களிற் சிறந்த அறம் என்று உணர்த்தவதற்காக,

முதலமைச்சராக இருந்தபொழுது திருநாகேச்சுரத்தில் தாமே முன்னின்று திருக்கோயில் எடுப்பித்தார். முன் முதலமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தமது பிறந்த ஊராகிய தொண்டைநாட்டுக் குன்றத்தூரிலும் திருநாகேச்சுரம் திருக்கோயிலைப் போலவே ஒரு திருக்கோயில் எடுப்பித்தார். அத் திருக்கோயிலில்தான்