பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

133


எடுத்துக் கூறும் திருமுறை நெறியே செழுந்தமிழ் வழக்கு. இச் செழுந்தமிழ் வழக்கு தொல்காப்பியர் காலந்தொட்டு வளர்ந்து வரும் மரபு. ஆதலால் சேக்கிழார் செந்நெறி நிற்போமாக! திருத்தொண்டினால்தான் வையகத்தை வாழ்விக்க முடியும். ஒரு தத்துவத்திற்கு மக்கள் மன்றத்தில் நிலையான இடத்தைப் பெற்றுத் தருவது பிரசாரங்கள் மட்டுமல்ல. உபதேசங்கள் மட்டுமல்ல. அத்தத்துவம் செயலுருவம் பெற்றாக வேண்டும். மீண்டும் தமிழகத் திருக்கோயில்களில் அப்பரடிகள் தொடங்கி வைத்த உழவாரப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். அவ்வழி நமது திருக்கோயில்கள் பேணிக் காக்கப் பெறுதல் வேண்டும். திருக்கோயில்கள் நமது வாழ்வின் மையம், உயிர் நாடி! திருக்கோயில்களைக் கடவுளின் இருப்பிடமாக மட்டும் கருதிச்சமுதாயத்தைப் புறத்தே தள்ளிய அயல்வழக்கின் கொடுமையை உணர்க! அக்கொடுமையால் திருக்கோயில்கள் சமுதாயத்திலிருந்து விலகிவிட்டன. சமுதாயமும் திருக்கோயில்களிலிருந்து நெடுந்தொலைவிற்கு விலகி விட்டது. இல்லை, திருக்கோயில்கள் மாறுபாடாகக் கூட நடக்கத் தலைப் பட்டுள்ளன. கடவுட் பொருள் தனிமைப்படுத்தப் பெற்று ஏகபோகத்திற்குரிய முதல் போலாகி விட்டது. புறத்தே தள்ளப்பட்ட மக்களோ "இவர்தேவர் அவர் தேவர்” என்று தேடி அலைந்து எய்த்துக் களைத்துப் போகின்றனர்! கடவுளும் ஆன்மாக்களும் கலந்து மகிழும் இடமே திருக்கோயில்களை மையமாகக் கொண்டே வளர. வேண்டும், விளக்கம்பெற வேண்டும் "கோயிலைத் துழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயிலும் காண வேண்டும். வாழ்க்கைப் போக்கில் சமூகத்தில் நிகழும் சிக்கல்களுக்கு, திருக்கோயில்களில் பஞ்சாயத்துக்கள் காணப்பட்டு, அவற்றின் மூலம் தீர்வுகாணப்பட வேண்டும். திருக் கோயில்கள் சமுதாயப் பணிமனைகளாக உருக் கொண்டால் உடைமைச் சிக்கல்கள் தோன்றா; குத்தகை வரவில்லை,