பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

171


முறைப்படுத்திக் கூறுகிறார். ஆதுலர்க்கு உணவளிக்கும் அறச்சாலைகள் அமைத்தல், தண்ணிர்ப்பந்தல் அமைத்தல், மழைவளம் தருவதுடன் மன்னுயிர்க்கு நிழல் தரும் காடு வளர்த்தல், மனிதரும் விலங்குகளும் குளித்து மகிழக் குளங்கள் தொடல், வேண்டுவார்க்கு வேண்டுவன தருதல், விருந்தளித்தல், செந்தமிழ் நாவலர்க்கு வழங்குதல், ஈதல் முதலிய அறங்களை அப்பரடிகள் செய்துள்ளார் என்பதனை,

"மாசில்மனத் துயரொழிய மருணிக்கி யார் நிரம்பித்
தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேற் புகழ்விளங்க நிதியளித்துக்

கருணையினால்
ஆசிலறச் சாலைகளும் தண்ணிர்ப்பந் தரும்

அமைப்பார்”.

"காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும்

விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக நல்கியும்நா
னிலத்துள்ளோர்
யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்."


என்ற பாடல்களால் அறியலாம். அப்பரடிகளையே வழிபடும் தெய்வமாகக் கொண்டு போற்றி அவர் வழி நின்றொழுகிய அப்பூதியடிகள், பலரும் நடமாடும் வழியில் தண்ணிர்ப்பந்தல் அமைத்துப் பணி செய்துள்ளார். குளம் தொட்டும் பணி செய்துள்ளார். காடு வளர்த்தும் பணி செய்துள்ளார். இவை பொதுத் தொண்டு.

சிவனடியார்பால் அன்பு பூண்டொழுகி அவர்க்குத் தொண்டு செய்தலும் தொண்டேயாம். சிறுத்தொண்டர், இளையான்குடி மாற நாயனார் முதலியோர் அடியார்க்கு அமுதருத்தித் தொண்டு செய்தனர். திருநிலகண்டர்