பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

205


வள்ளுவம் கூறும். "புலன் அழுக்கற்ற அந்தணாளர் என்று புறநானூறு புகலும். பொறிகளில் தூய்மை காத்தல் எளிது; புகழ்ச்சியின் பால் உள்ளவிருப்பும், இகழ்ச்சியின்பால் உள்ள வெறுப்பும், தண்டனையின்பால் அச்சமும்கூட, பொறிகளின் தூய்மை காக்கத் துரண்டும். பொறிகளில் தூய்மை காத்துப் புலன்களில் மாசற்று இருந்தலைப் "புறம் சுவர்க்கோலம் செய்தல்” என்று நகைத்துப் புறக்கணிக்கும் சான்றோர் உலகம். புலன்களில், மனத்தில், உணர்வில், உயிரில் துய்மை காத்தலே தூய்மை. ஆதுவே தவம். புலன் தூய்மை பேணும் தவத்தின் பொலிவே பொறிகளில் துய்மை தர வேண்டும். புலன்களில் உள்ள சீலத்தினை - நோன்பினைக் காக்கும் வேலியாகப் பொறிகளின் துய்மை துணை செய்யலாம்.

பொறிவாயில் ஐந்தவித்தல் என்று வள்ளுவம் காட்டும் வாழ்வியல் எண்ணத்தக்கது. அவித்தல்-அழித்தல் அல்ல; ஒடுக்குதல் அல்ல; அடக்குதல் அல்ல; கிழங்கு அவித்தல், இட்டலி அவித்தல் என்ற உலகியல் வழக்குளை ஒப்பு நோக்குக. "சுவையில்லாத வற்றிற்கும் சுவை தந்து, நலந்தரு பொருளாக மாற்றுதல் அவித்தலால் பெறப்படும் பயன். அது போல உயிர்க்கு இன்பம் பயவாத புலன்களை, இன்பந்தரும் நெறியில் பக்குவப் படுத்துதலே அவித்தல் ஆகும்.

மோனத்திலிருந்து, பொறிபுலன்களை ஒருங்கிணைத்து உடையானின் திருவடிப்போதில் ஒன்றிய உள்ளம் பெற்றவர்கள் முனிவர்கள். கயிலையில் முனிவர்கள் சூழ இறைவன் - பரமசிவம் உமையொடு காதலித்தருள் பாலிக்கிறான். பெருமானுக்குப் பணிவிடை செய்தலை மேற்கொண்டிருந்த ஆலால சுந்தரம்-கமலினி, அநிந்திதை மீது மனம் செலுத்தினார். அண்ணல் பெருமானுக்கு இது தெரிந்தது. மாதர்மேல் மனம் வைத்த ஆலாலசுந்தரரை-மண் மீது மெல்லியலாளருடன் காதலின்பம் கலந்தணைந்து வாழ ஆணை பிறப்பித்தனன், இது என்ன நீதி: இறைவனக்கு ஒரு நீதி, அடியார்க்கு ஒரு நீதியா: கயிலையில் இறைவன்