பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

211



மனுநீதி தோன்றிய காலத்தில் வாழ்ந்த மனித சமுதாயத்தை நோக்கின் மனு ஆயிரம் மடங்கு உயர்ந்தவன். அவன் காலத்தில் வாழ்ந்த பிறநாட்டு அரசியல் சிந்தனையாளர்களை நோக்கின் அவனது அறிவியல் உயர்ந்தது. ஏன்? இன்றுமட்டும் என்ன வாழ்கிறது? மனுவை மறுப்பவர்கள் பெரிய குறையாகச் சொல்வது ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற முறையைத் தான்்! ஒரே வகையான குற்றத்திற்கு மனிதர்களைப் பொறுத்துத் தண்டனை மாறுகிறது என்பதுதான்ே! இன்று தண்டனை ஒரு மாதிரியாகவா இருக்கிறது? இன்றைய சிறைச்சாலையில் வகுப்பு வேறுபாடு இல்லையா? பாமரனுக்கு ஒரு தண்டனை-படித்தவனுக்கு ஒரு தண்டனை என்று இல்லையா? ஏழைக்கு ஒரு தண்டனை-செல்வருக்கு ஒரு தண்டனை என்று இல்லையா? அறிந்து திட்டமிட்டு அரசுக்கு எதிராகப் போட்டியாகக் கள்ளநோட்டு அடித்த செல்வந்தர் சிறையில் ஏ. வகுப்பில் வாழவில்லையா? அதே சிறையில் உணர்ச்சியின் தூண்டுதலினால் தவறு செய்தவர்கள் "சி" வகுப்பில் சித்திரவதைக்காளாக வில்லையா? தெளிவாகச் சொன்னால் மனுவின் நீதிமுறை குலப்பிரிவுகளில் மாறுபடுகிறது. ஆனால், செல்வ ஏற்றத் தாழ்வு காரணமான மனுவின் நீதி மாறுபடவில்லை. இன்றோ நாம் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். சமநிலைச் சமுதாயம் என்று வாய்கிழியப் பேசுகிறோம். ஆனால் மனுவின் காலத்திலில்லாத செல்வத்திற் கேற்றவாறு தண்டனையைக் கூட்டிக்குறைத்து வழங்குகின்ற முறை நிலவுகின்றதே! மனு குலத்தின் அடிப்படையில் மனிதகுலத்தைப் பிரித்தான்்.

மனுவினுடைய குலமுறைப் பிரிவு வள்ளுவருக்கும் உடன்பாடே. சாதிமுறை என்பது வேறு, குலமுறை என்பது வேறு. பழங்காலத்து முறை சாதிமுறைப்பிரிவு குலமுறைப் பிரிவு பிறப்பின் பாற்பட்ட தல்ல. கொண்டொழுகும்