பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

213


உண்டு. சின்னஞ்சிறு வீட்டில் அவருக்கு ஏவல் செய்து வாழும் பணியாளர்களும் உண்டு. இன்றும் வேறுபாடு உண்டு. ஆனால், வேறுபாடு இடைக்காலத்திலிருந்ததுபோல் அல்லாமல் அதாவது பிறப்பின் பாற்பட்டதல்லாமல் தகுதியின் பாற்பட்டதாக அமைந்துவிட்டது. ஆனால் இந்த மாற்றம் சட்டத்தின் அடிப்படையில் உலகியலில் அரசியலில் ஏற்பட்டிருக்ருக்கிறதே தவிர, சமுதாயம், முழுமையும் தழுவியதாக இல்லை. எனவே, மனுநீதி முற்றாக மறுக்கத் தக்கதுமல்ல, முற்றாக ஏற்றுக் கொள்ளத் தக்கதுமல்ல. மனுநீதி, மிகுந்த மரியாதை யுணர்ச்சியுடன் ஆய்வு செய்யத்தக்கது. அங்கனம் நடுநிலை உணர்வுடன் ஆய்வு செய்தால் மனுநீதி ஏற்றுப் போற்றத்தக்கதாகவே அமையும். அதனாலன்றோ ஆருரை ஆண்ட சோழன் ஆட்சி மனுநீதியில் அமைந்தது என்று சேக்கிழார் காட்டுகிறார்.

தமிழக வரலாற்றில் சோழப் பேரரசு புகழ்பூத்த பேரரசு. அரசுக்குரிய விழுமிய சீலமாகிய நீதியைப் போற்றிய பேரரசு சோழப் பேரரசனின் திருமகன் தேரில் உலா வந்தான்். அரச வீதியில் தேர் வந்து கொண்டிருந்த போது பச்சிளங்கன்று ஒன்று மிரண்டு யாரும் அறியா வகையில் ஒடித் தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டது. கன்றினை இழந்த பசு துயரம் தாங்க மாட்டாது அரண்மனை நோக்கி விரைந்தோடிற்று. சோழப் பேரரசின் கொற்றவனின் கோயில் முன்னேயுள்ள மணியைத் தன் கொம்பினால் இழுத்து ஒலிப்பித்தது. மணி ஓசை கேட்ட அரசன் பதறி ஓடி வந்தான்். கன்றை இழந்த பசு, கண்ணிருடன் நிற்பதைக் கண்டான். பசுவின் கண்ணிர் பாராளும் மன்னனின் நெஞ்சினைத் சுட்டது. அரசின் ஆணையைக் குற்றமற நிறைவேற்ற வேண்டிய அமைச்சரை இகழ்ச்சியுடன் நோக்கினான். அமைச்சர் நிகழ்ந்தன கூறினார். நிகழ்ந்தன மட்டும் கூறாமல் நிகழ்வுக்கு உரிய காரணங்களையும்-சமாதான்ங்களையும் கூடச் சேர்த்து அமைச்சர் எடுத்துக் கூறினார்.