பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

221


இன்பம் இல்லை; துன்பமில்லை; பகைமை இல்லை. இங்ஙனம் அனைத்தையும் கடந்து பழுத்த மனத்தோடு விளங்கும் மனப்பான்மையை அடியார் வணக்கம் தரும்.

சுந்தரர், சிவபெருமான் திருவடியிற் பதித்த நெஞ்சுடை யாரேனும் மண்ணக வாழ்க்கையை நன்றாக ஆரத்துய்த்து வாழ்ந்தவர். அது மட்டுமா? இறைவனிடத்தில் நிறைய உரிமைகளைப் பெற்றவர். . நாம் கூசி நடுங்கக் கூடிய செய்திகள் பற்றிக் கூட அவர் இறைவனிடத்தில் தாராளமாகக் கேட்டிருக்கிறார். இல்லை, அமரர்களையும் மற்றவர்களையும் ஏவல் கொள்ளும் இறைவனை ஆரூரர் ஏவல் கொண்டுள்ளார். ஆரூரருக்கு நெல் முதலியன வழங்கும் கடப்பாடுடையவர்களில் ஒருவர் குண்டையூர்க்கிழார். குண்டையூர்க்கிழார் அளித்த நெற்குவியலை எடுத்துச் செல்ல ஆள் பணித்தருளும் படி ஆரூரர் திருக்கோளிலித் திருக்கோயிலில் வேண்டுகிறார். திருக்கோளிலி எம்பெருமான் அருளால் பூத கணங்கள் ஆரூர்க்குக் கொண்டு சேர்த்தன.

சந்தரர், காதல் விருப்புடையவர் என்பது உண்மை. ஆயினும் அவர் சீலத்திற் சிறந்தவர் என்பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். கோட்புலியார் தாம் பெற்ற அருமை மகளிர் சிங்கடியார், வனப்பகையார் இருவரையும் மணந்து மகிழ்ந்தருளும்படி வேண்டுகின்றார். சுந்தரர் இவர்கள் நான் பெற்ற மக்களனையர் அதனால் மணத்திற்கியலாது என்று மறுத்து விடுகின்றார்.

பங்குனித் திங்கள் வந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் பங்குனி உத்தரத் திருநாள் ஆரூரர்க்கு நினைவு வருகிறது. உடன் பரவையிர், திருநாளின் பொழுது வழங்கும் கொடை நினைவுக்கு வருகிறது. பரவையார், திருநாளின் பொழுது வழங்கும் கொடை நினைவுக்கு வருகிறது. பரவையார் கொடைக்கு முட்டின்றி நிறையப் பொன்கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நினைப்பும் தோன்றுகிறது. சந்தரர்க்குப்