பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

237


இந்தச் சராசரி மனித வியலுக்கு ஆரூரரும் விதி விலக்கல்லர். திருமுதுகுன்றில் வந்த பொன்னை - திருவாரூரில் கொண்டு வந்து தர வேண்டுமாம்.

சாதாரணமாகத் தாம் வாழ்வதில் மட்டுமே மனிதர்கள் நாட்டம் செலுத்துவதில்லை. தமது வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்து மயங்க வேண்டும்; வியக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏன்? மற்றவர் வியப்பதற்காகவே சிலர் வாணவேடிக்கை போன்று வெற்று ஆரவார வாழ்க்கையை நடத்துகின்றனர். இஃது உலகியற்கை ஆரரருக்கம் தாம் பெற்ற பொன்னை ஆரூரில் கொண்டு வந்து தரவேண்டும்; பலரறியத் தரவேண்டும்; மற்றவர் மயக்கத்துடன் கூடிய வியப்பினை அடைய தக்க வகையில் தரவேண்டும் என்கிற விருப்பம், இந்த வேண்டுகோளையும் தம்மிடம் அன்புடையவரின் பாரம் தாங்கும் இறைவன் ஏற்றுக்கொண்டான். உடன் மணிமுத்தாற்றில் பொன்னை இட்டுவிட்டுப் போய் ஆரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்ளும்படி அருளுகின்றான் இறைவன்.

ஆரூரரும் மணிமுத்தாற்றில் பொன்னை இடுகின்றார். இந்த நிலையில் ஆரூரர் இரண்டு மனநிலையினராக விளங்குகின்றார். அதாவது இயல்மொழியை அருளாணை யென ஏற்று ஆற்றில் பொன்னை இடுகின்றார். மணிமுத்தாற்றில் இடும் பொன்னை ஆரூரில் உள்ள குளத்தில் எடுக்கலாம் என்று நம்புகின்றார். ஆயினும் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னே மாற்றுக்குறையாமல் ஆரூரில் கிடைக்கிறதா என்பதைச் சோதித்தறிய மச்சம் வெட்டிவைத்துக் கொள்கிறார். மச்சம் வெட்டி வைத்துக் கொள்ளுதலில் இறைவனிடத்தில் உள்ள நம்பிக்கை மாற்றுகுறைவதுபோல் தெரிகிறது. ஆனால் உண்மையன்று. "உலகியல் கடந்த அருளியல் இல்லை" என்பதே ஆரூரரின் வரலாற்று நோக்கம்.

பொன்னைப் பெற்ற பிறகு, அந்தப் பொன் ஆரூருக்குச் சொந்தம். அந்தப் பொன்னை ஆரூரர் பயன்படுத்தும்