பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

269


எழுந்தருளியுள்ள இறைவன், திருஞான சம்பந்தர் கைகளால் தாளம் ஒற்றிப் பாடியதைக் கண்டு இரங்கி பொற்றாளம் கொடுத்தருளியதை நினைந்துருகிப் பாடுகின்றார்! இதனால் தமக்கும் இரங்கியருளுவார் என்று பாடியது, திருக்குறிப்புப் போலும்; திருக்கோலக்காவில் அருளிச் செய்த பதிகத்தில் தான்,

"நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
            ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈத்தவன் பாடலுக் கிரங்கும்
             தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
             அங்கணன்றனை என்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
               கோலக் காவினிற் கண்டுகொண் டேனே!

(ஏழாம் திருமுறை-642)

என்று திருஞான சம்பந்தரைப் பாராட்டுகின்றார். திருஞான சம்பந்தர் சிவநெறியை வளர்த்தவர்; பரப்பியவர், ஆயினும் ஆரூரர் "தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்” என்று சொல்வதன் பொருள் என்ன?”

தமிழே சைவம்! சைவமே தமிழ்

'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்" என்றருளிய திருப்பாடல் படித்துப் படித்துப் பயன்பெற வேண்டிய திருப்பாடல். தமிழ் வளர்ந்த ஒரு மொழி. உலக மொழிகள் பலவற்றுக்கும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால் தமிழ் மொழியில் தமிழ் மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் உண்டு. தமிழர் பன்னெடுங் காலத்துக்கு முன்பே சமயநெறி நின்றனர். தமிழ் ஒரு ஞானமொழி, இறைவனே ஆய்வு செய்து வளர்த்த மொழி; தமிழைப் படிப்பதில், தமிழ்ப்