பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

271



பொதிசோறும் குளிர்நீரும் கொடுத்தபிரான்

திருக்கோலக்காவை வணங்கி மகிழ்ந்த பிறகு சீகாழி என்று போற்றி வணங்கிக் கொண்டு திருக்குருகாவூர் செல்கின்றார். சுந்தரருக்குத் தோழன் இறைவன். தன்தோழன் நம்பி ஆரூரர் பசித்து வருந்திய நிலையில் வருவதை அறிந்து, தண்ணீரும் பொதி சோறும், கொண்டு போய் வைத்துக்கொண்டு ஆரூரர் வரும் வழியில் எம் பெருமான் காத்திருக்கின்றார். ஏன்? பெருமானுக்கு இரட்டைப் பொறுப்பு! ஒன்று, தோழர் சுந்தரரைப் பாதுகாப்பது. பிறிதொன்று பரவையாரின் கணவரைக் காப்பது! பெருமானே முன்னின்று பரவையாரிடம் தூது போய்த் திருமணம் செய்து வைத்தார். அந்த வகையில் சுந்தரருடைய வாழ்க்கைத் துணைநலமாகிய பரவையாருக்கு நலம் செய்து மங்கல - நூணைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சிவபெருமான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சமய வாழ்க்கையில் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் தனித்தனியே கடமைகளும் - பொறுப்புக்களும் உண்டு. இறைவன் நம்பியாரூரர் வரும் வழியில் இத்தண்ணீர்ப்பந்தல் இருக்கிறது. தண்ணீரும் பொதிசோறும் கொண்டு வந்து காத்திருக்கிறார். உண்பவர்கள் காத்திராமல் உண்பிக்கப் பெறுதல் வேண்டும் என்ற மரபு அறிக. தண்ணீர் என்று வாளா கூறாமல் "உண்ணீர்" என்றார். அடுத்து வரும் பாடலில் உண்ணீர் அமையும் பாங்கு கூறப்பட்டுள்ளது. "ஏலாறுங் குளிர் தண்ணீர்” என்று கூறப்படுதலறிக. குளிர்ந்த நீரே குடிக்கத் தக்கது. “குளிர்ந்த” என்பதால் கொதிக்க வைத்துக் குளிர்ந்த தண்ணீர் என்று பொருள் கொள்ளற்க; குளிர்ந்த நீரே உடலுக்கு நல்லது 'உண்ணீர்' என்பது உண்ணப் படுதலுக்குரிய தண்ணீர் என்று பொருள் தருகிறது. அதாவது உண்பதற்குத் தகுதியுடைய தண்ணீர். எல்லாத் தண்ணீரும் உண்ணக் கூடியதல்ல, "உண்ணீர்” என்று தண்ணீரை முதலிற் கூறியது பசியினும் நீர்வேட்கையே முதலில் தணிப்பதற்குரியது என்பதறிய! நீர்வேட்கை தணியாமல் உணவு