பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

273


முடிகிறது. நம்பியாரூரர் உறங்கும் பொழுது வேதியர் மறைந்து விட்டார்; தண்ணிர்ப் பந்தருடன் மறைந்து விட்டார். நம்பியாரூரர், துயில் நீங்கித் திருக்குருகாவூர் வெள்ளடை சென்றடைகின்றார்.

திருக்குருகாவூர் வெள்ளடை என்ற திருத்தலம் இன்று திருக்கடவூர் என்ற பெயரில் வழங்கப் பெறுகிறது. இறைவன் பெயர் வெள்விடைநாதர். வெள்ளடை என்பது தத்துவ நிலையில் பரமாகாசத்தைக் குறிக்கும். "வேதனை தீர்தரு வெள்ளடை” என்பது திருமந்திரம்.

இறைவன் அளித்த சோறுண்டு உறங்கி விழித்த நிலையில் தண்ணீர்ப் , பந்தரைக் காணோம்! இத் திருப்பதிகத்தில் இறைவன் பசியால் வருந்திய ஆரூரனாருக்குப் பொற்சோறளித்துக் காப்பாற்றியதை ஆருரர் நன்றி உணர்வுடன் பாடிப் பரவுகின்றார். "ஆவியை போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்” என்றும் “பாடுவார் பசி தீர்ப்பாய்” என்றும் அருளியுள்ளமை அறிக. சுந்தரர் உலகியல் வாழ்க்கையை முழுதுற வாழ்ந்தாலும் இறைவனுடன் இரண்டறக் கலந்து நின்று இறைவன் திருவருளைத் துய்த்து அனுபவித்தார்

"பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற்
                    சுவையொப்பாய் கண்ணிடை
மணியொப்பாய் கருஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே."

(ஏழாம் திருமுறை-294)

என்பது சுந்தரர் திருப்பாடல். பண்ணிடைத் தமிழ் செவிப்புலனுக்கு இன்பம் தருவது பழந்தினிற்சுவை நாவிற்கும் உடலுக்கும் இன்பம் தருவது கண்ணிடைமணி, உறுதியுணர்த்துவது. கண்ணிடைமணி என்றதால் உயிரின் தண்மணியுள் நின்று இறைவனைக் கண்டு மண்ணில்

கு.ix.18.