பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

315


பரவையாரைச் சமாதான்ம் செய்யப்பெரிதும் முயற்சி செய்தனர். ஒன்றும் பலன் கிடைக்கவில்லை.

பரவையாரின் புலவி நீக்கத்திற்குத் தம்மைச் சார்ந்த முயற்சிகள் பயன் தரவில்லை. நம்பியாரூரர் தனித்து இருந்து சிந்தித்தார். சிந்தனையின் முடிவு தன் தலைவன் சிவபிரானையே தூது அனுப்புவது என்பதாயிற்று. வினையின் பயனாக இணைந்த பரவையாரின் புலவி தணிக்கத் திருவுள்ளம் கொள்ளும்படி இறைவனை வேண்டுகிறார். இறைவனும் நம்பியாரூரர் முன் எழுந்தருளினன்.

"இறைவா, குற்றத்தில் அகப்பட்டு ஆழ்கின்றேன். என்னை எடுத்தாள வேண்டும்” என்று வேண்டி நின்றார்; "இறைவா! தியாகேசா! நான் சங்கிலியை மணமுடித்து வாழ்ந்த நிகழ்வுகளைப் பரவை அறிந்து வைத்திருக்கிறாள். அதனால் என்மீது வெறுப்பு! என்னைப் பார்த்தால் உயிரை விட்டு விடுவதாகக் கூறுகிறாள்! இறைவா! நான் உனக்கு அடிமை! நீ எனக்குத் தோழன்! இது உண்மையானால் இப்போதே இந்த இரவிலேயே பரவையின் புலவி தீர்த்து வருக!" என்று வேண்டினார். தியாகேசனும் தூது போக உடன்பட்டுத் துாது போனான்.

இறைவன் அன்பர் துயர்நீக்கும் இயல்பினன். அமரர்களுக்கு அமுதை வழங்கத் தான் நஞ்சுண்டு "நீலகண்டன்” என்ற பெயரைப் பெற்றவன். அமரர்களும் முனிவர்களும் நம்பியாரூரர் மனமும் தொடரப் பரவையார் திருமாளிகை நோக்கி நடந்தனன். திருவாரூரில் பரவையார் வாழ்ந்த பகுதி சிவலோகம் போலக் காட்சியளித்தது. சிவன் எம்பிரான் திருவடிகளில் அணிந்துள்ள சிலம்பு ஒலி செய்கிறது. இறைவன் திருவடிகளைத் தேடித் தேடிக் காண முடியாமல் எய்த்துக் களைத்துப்போன நான்முகனையும் திருமாலையும் சிலம்பொலி அழைக்கிறது. "வருக! வருக! பரவையார் வீட்டிற்கு வருக! எளிதில் சிவபெருமான்