பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

நாயன்மார்களின் அடிச்சுவட்டில்

வேண்டுகோள்

அருள் நெறித் தந்தை தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் மாக்கதையில் சிந்தை ஊன்றித் திளைத்தவர்கள். அவர்கள் "திருத்தொண்டர் மாக்கதையில் பேசப்பெறும் திருத் தொண்டர்கள் ஆற்றிய தொண்டுநெறி நாட்டில் பரவினால் தான் நம் சமயம் மக்களிடத்தில் ஒளிபெற்றுத் திகழமுடியும்” என்று பல்லாண்டுகளாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். இதனை அவர்களே நடைமுறைப் படுத்தியும் வருகின்றார்கள். அவர்கள், கண்ணப்ப நாயனார் திருநாளில் கண் பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடிகள் வாங்கி வழங்கியும், திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாளில் உடல் நலக்குறைவு காரணமாக இளைத்த மாணவிகளுக்கு உயிரூட்டச் சத்துள்ள மருந்துகள் வாங்கி வழங்கியும்,


குறிப்பு- பரிதாபி ஆண்டு நாயன்மார்கள் திருநாள்கள் மட்டும் தேதியுடன் இதில் தரப்பெற்றுள்ளன. அடுத்த ஆண்டுகளுக்குப் பிற்சேர்க்கையில் கண்டுள்ள நட்சத் திரங்களின்படி செய்யவேண்டும். நாயன்மார் திருப்பெயர்களுக்குக் கீழே அடைப்பில் தந்துள்ள எண்கள் நாயன்மார் திருப்பெயர்வரிசையில் அந்தந்த வரிசை எண்ணுக் குரியவரின் செயற்பணியோடு தொடர்புடையன..

கு.IX.21