பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/347

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) அறுபான்மும்மை நாயன்மார்களுக்கு எண்ணெய்க் காப்பும், திருமுழுக்கும் செய்வித்துச் சிறப்பு வழிபாடு செய்தல்.
(5) பெரியபுராணத்தைப் பரப்பும் தொண்டர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தல்.
(6) பெரியபுராண மறுப்புரைக்கு மறுப்புரை எழுதி வெளியிடுதல்.
(7) அனுபான்மும்மை நாயன்மார் தொண்டை நடைமுறைப் படுத்திய செயல்முறைபற்றி ஆய்வு செய்தல்.
32 சாக்கிய நாயனார் மார்கழி-பூராடம் (1) திருக்கோயில் வழிபாட்டில் நம்பிக்கை யில்லாதவர்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையில் நேரடியாகத் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல்.
(2) அந்த வகையில் பேசுதல்-எழுதுதல்-அரங்குகள் நடத்துதல்.
(3) அந்தவகையான நூல்கள் அச்சிடுதல்.
33 சிறப்புலி நாயனார் (9) கார்த்திகை-பூராடம் (1) சிவபூசகர்களுக்கும், அடியார்களுக்கும் அமுதளித்தல்-பொருள் அளித்தல்.
34 சிறுத்தொண்ட நாயனார். சித்திரை-பரணி (1) திருமடங்களுக்குப் பிள்ளைகள் சேர்த்தல்.
(2) சமய இயக்கத்துக்குத் தொண்டர்களைச் சேர்த்தல்.