பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) (அ) அப்பர் வரலாறு திருமுறை பற்றிய கருத்தரங்குகள் நிகழ்த்துதல்.
(ஆ) நமது சமயத்திலிருந்து மக்கள் மதமாற்றக் கொடுமைகளுக்கு ஆளாகாமல் பாதுகாக்கத் திட்டமிடுதல்-செய்தல்.
(5) சாதி வேற்றுமைகள் அகற்றும் பணியில் ஈடுபடுதல்
(6) நிறுவனத்தின் உடைமை பொதுமக்களின் நலனுக்குப் பயன்படும் வகையில் துப்புரவு வாழ்க்கைக்குத் திட்டமிடுதல், மேற்கொள்ளுதல்.
(7) குன்றக்குடி கிராம வீதிகளின் தூய்மைக்குரிய பணிகளை மேற்கொள்ளல்.
42. திருநாளைப்போவார் நாயனார் புரட்டாசி-உரோகிணி (1) தீண்டாமை விலக்கல் பணிகள் செய்தல்.
(2) ஆதீன-தேவாலய நிலங்களை உழவடை செய்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருக்கோயில் சிறப்பு வழிபாடு செய்தல்.
(3) அவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
43. திருநீலகண்ட நாயனார் தை-விசாகம். (1) திருக்கோயில்களுக்குத் திருவமுது படையலுக்கு எடுத்துச் செல்லும் கலன்கள் தூய்மை செய்தல்-தேவைக்கு வாங்குதல்.