பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) சிறந்த சமயப் பற்றும் கல்வித் திறனும் உள்ள மாணவிக்கு மேற்படிப்புக்கு ஊக்கமளித்தல்.
(5) நம் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் நலன்-மகளிர் பள்ளிகள் வளர்ச்சி ஆகியன குறித்து ஆராய்தல்.
(6) சமயப் பணியில் ஈடுபட்டுள்ள மகளிருக்குப் பாராட்டுச் செய்தல்.
56 மானக்கஞ்சாற நாயனார் மார்கழி-சுவாதி (1) திருக்கோயில் முடியெடுக்கும் இடங்கள் சீர் செய்தல்.
(2) முடியெடுக்கும் பணியாள்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
57 முருக நாயனார் (11) (21) (36) வைகாசி-மூலம் (1) நந்தனவனம் அமைத்தல், வளர்த்தல், பேணுதல்.
58 முனையடுவார் நாயனார் பங்குனி-பூசம் (1) திருக்கோயில் பாதுகாப்பிலும், அருள் நெறி இயக்கத்திலும் உறுதியாகப் பகை, துன்பம், இழப்புப் பாராமல் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
59 மூர்க்க நாயனார் கார்த்திகை-மூலம் மூர்க்க நாயனார் பெயரால் பரிசுச்சீட்டு வாங்குதல், பரிசு விழுந்தால் அந்தத் தொகையைத் திருக்கோயில் பேணலுக்குக் கொடுத்தல்.