பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

பெரியபுராணச் சொற்பொழிவுகள்


கூத்தியற்றும் அம்பலவாணரையுமே பாடினார்; அரண்மனை வசித்தோரைப் பாடவில்லை; அவர்களில் அரனடிக்கு ஆளானோரையே பாடினார்.

பெரியபுராணத்தில் பாடப்பெற்றுள்ள பெருமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றிபெற்ற நற்றவச் சான்றோர்கள். பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்களுக்குப் பத்தி யுண்டு. ஆனால், பத்தியென்ற ஒரு தகுதி கருதியே சேக்கிழார் பாடிவிடவில்லை. சீலத்திலும் நோன்பிலும் செறிவிலும் அறிவிலும் ஆராஅன்பிலும் அருளிலும் சிறந்து விளங்கிப் பத்திமையும் கொண்டு ஒழுகியவர்களைத்தாம் சேக்கிழார் பாடினார். வாழ்க்கையைக் குறிக்கோளுடையதாகக் கொண்டு குறிக்கோளையடையும் உறுதியும் பூண்ட - இன்பத் துன்பங்களைப் பொருட்படுத்தாது இலட்சியப் பயணம் செய்த தவச் செல்வர்களைத்தாம் சேக்கிழார் சிந்தை குளிர, உளம் குளிர வாழ்த்துகின்றார். பத்திமைப்பாங்கில் நின்றவர் களும் திருத்தொண்டின் நெறியில் நின்றவர்களுமே போற்றப் பட்டிருக்கிறார்கள். “மாதேவர்க்கு ஏகாந்தராக" ஒழுகித் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர்களாகிய அடியார் பெருமக்களின் வாழ்க்கையை எந்த வேறுபாடும் கருதாது திருத்தொண்டின் தகுதி ஒன்றையே தகுதியாகக் கருதிப் பெரியபுராணத்தைப் பாடியிருப்பதொன்றே அஃதோர் உலகப் பொதுநூல் என்பதற்குச் சான்றாகும். பெரியபுராணத்தில்-ஆடவர்

பெரியபுராணத்தில் பாடிச் சிறப்பிக்கப் பெற்றுள்ள பெருமக்கள் நிறைநலம் பெற்று விளங்கியவர்கள். ஒரோ வழி, குறைநலம்போலத் தோற்றினாலும் அக்குறை தடிப்புடைய தாக இருந்ததில்லை. அதுமட்டுமின்றி இறை சார்பான வாழ்க்கைக்கு அக்குறை தடை செய்ததாகவும் இல்லை. திருநீலகண்ட நாயனார், வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்; “பொய் கடிந்த அறத்தில்" வாழ்ந்தவர்;