பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாயன்மார்கள் காட்டும் வழி

71



இயற்கையோடியைந்த வாழ்வைத் தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழர்கள் வாழ்வு இயற்கையோடியைந்தது. இந்த இயற்கை வாழ்வைச் சமணர்கள் மாற்றி அமைக்க எத்தனித்தனர். அப்போதுதான்் அப்பரும் சம்பந்தரும் ஒரு நிலைமை மாற்றத்தைக் கொணர விழைந்தனர். பண்ணோடு இசை கேளாத சமணர்களின் போக்கை மாற்றியமைக்கும் பொறுப்பு சம்பந்தருக்குக் கிடைத்தது. சமணர்கள் மலரிடை மணம் நுகரார் என்றனர். அப்பரும் சம்பந்தரும் இதற்கொரு மாற்றத்தைத் தேட வேண்டியிருந்தது. சம்பந்தர் தாம் பாடும் தேவாரங்களில் இயற்கையைப் பற்றி எடுத்தியம்பினார். மேல் நாட்டுக் கவிஞர்கள்தான்் இயற்கையை வர்ணித்துப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள் எனக் கருதுபவர்கள் சம்பந்தர் திருப்பாடல்களை ஒருமுறை படித்து இன்புறுவார்களாக

சமண-புத்த சமயத்தவர்கள் பெண்மைக்கு மதிப்பளிக் காதவர்கள்-தெளிவாகச் சொன்னால் பெண்ணினத்தை வெறுத்தவர்கள். இந்நிலையிலேதான்் ஞானசம்பந்தர் பெண்ணினத்தைப் போற்ற முற்பட்டு இறைவனைப் பெண்ணோடு தொடர்புபடுத்திப் பாடினார். முதலில் பாடி அருளிய தேவாரத்திலேயே "தோடுடைய செவியன்” எனப் பாடியிருக்கிறார். "பெண்ணினல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே!” என்றார். மாதொரு பாகனாக நமது மகேஸ் வரனைக் காட்டிப் பெண்ணைப் பெருமைக்குரிய வளாக்கினார் சம்பந்தர்.

சமுதாயம் கோவில் தொண்டைப் புறக்கணித்தபோது சேக்கிழார் கோவில்தொண்டை வலியுறுத்திப் பாடினார், மனையில் வாழ்ந்த மாதவர்களைப் பாடினார். திருவருளை ஏற்று மனைவாழ்வு வாழ வேண்டுமென்பதைக் காட்டவே சுந்தரர் மனைவாழ்வை வாழ்ந்து காட்டினார். சமணத்தைத் தடுத்து, தமிழ் நாகரிகத்தைக் காத்த மங்கையர்க்கரசியாரை மங்கையர்க்குத் தனியரசி எங்கள் குலதெய்வம் எனத் தொழுகிறார். வேறொருவரையும் சேக்கிழார் பெருமான்