பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிந்து அருள்பாலிப்பான். திருமுறைக்காலத்துச் சைவ சமய நிலையை உருவாக்கப் பெரியபுராணம் ஒன்றே போதும். நமது சமய வாழ்வோ-சமய அனுபவமோ சேக்கிழார் அளவுக்கு இல்லை. சேக்கிழார் சுந்தரர் வாழ்வை உலக நடைமுறைப்படுத்தினார். இன்று கண்ணப்பர் காலமில்லை. ஆதலால் கண் தேவைப்படாது. தேவைப்படினும் கண் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம், கண்ணப்பர் குரு பூசை நாளன்று கண்பார்வை இழந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுக்கலாம். இயற்பகை நாயனார் குரு பூசையின் போது, வசதியில்லாமையினாலே திருமண மாகாதிருக்கும் ஏழைகள் நாலு பேருக்குக் கோவிலிலே திருமணம் செய்து வைத்தால் போதும். திருக்குறிப்புத் தொண்டர் திருநாளில் ஏழைக்கு உணவுப் பாத்திரம் கொடுக்கலாம்; ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டினை மாற்றவேண்டும். பிட்டுக்கு மண் சுமந்தான்் என்பதை மண்சுமந்தான்் பிட்டுக்கு என்று மாற்றவேண்டும். இக்காலத்தவர் பிட்டுக்கு மண் சுமந்த கதையைப் படித்துவிட்டுப் பிட்டை உண்கிறார்களேயொழிய மண்சுமத்தலை நினைப்பதில்லை. எனவே தொண்டை முன்னும் உண்டியைப் பின்னுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று, கிணறு தோண்டல், வீதி அமைத்தல் ஆகிய சிரமமான முயற்சிகளை நாம் மேற் கொள்ளலாம். சுவாமியை விதி வலமாக எழுந்தருளச் செய்து கொண்டுபோய் வைத்துப் பிட்டினைத் திருமுன் நிவேதித்துச் சிரமதான்த்தின் பின்பு புனிதமான பிரசாதமாக உண்ண லாம். கற்பனைக்கு அப்பாலான வாழ்க்கை அனுபவந்தான் பெரிய புராணம். வான்முகில் வழாது பெய்து-நீர்வளம் பெருகி, மலிவளம் சுரந்து-அரசு அருள்நெறி வழிப்பட்டு இயங்கி-யாதொரு குறையுமின்றி உயிர்கள் வாழ்தலே சாலச் சிறந்ததாகும்.