பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் # 3 றேன். ஆம்! கிடைத்த சான்றுகள் என்னேயும், என் கற்பனை யையும் காப்பாற்றியதோடு, களிப்படையவும் வைத்தன. அண்ணன்மார் பகைவரோடு போரிட்டு மடிந்த படுகணம்: அதனுள் காளியப்பன் மறைந்துகின்ற வன்னிமரத்தின் வேர்ப் பகுதி, பொன்னன், சங்கரனின் சிலைகள், சிறு கோயில்,மற்றும் அருக்காணி, கொங்குச் சோழன், கன்னிப் பெரிய காண்டியின் பதுமைகள் கண்டேன். காங்கள் போனநேரத்தில் திருவிழாவுக் காகக் கோயிலைப் பழுது பார்த்தும் புதுப்பித்துக்கொண்டும் இருந்தார்கள். சிலைகளைப் புகைப்படம் எடுத்தோம் கான் அங் கிருந்தோரிடம் மேலும் சில செய்திகளை கேட்டறிந்தேன். பல்லாயிரம் வீரர்கள் மடிந்து, சடலங்கள் குவிந்து, இரத் தம் உறைந்து நாளடைவில் அவைகள் இரத்தக் கோளங் கட்டிகளாக மாறி விட்டன என்று, கும்பல் கும்பலாகப் புதை புண்டு மேடிட்டுக் கிடந்தவற்றைக் காட்டினர். அவற்றின் புனிதம் கூறினர், தோண்டியெடுத்தோம்;பார்த்து பேக்தோம். அண்மையிலிருந்த குன்றுடையான் குன்றின் மேல், அவர் இறுதிக் காலத்தில் தவமிருந்த இடமும் பூசித்த சிவன் கோயி லும் இருப்பதாகக்கூறினர்கள் கன்னிப்பெரியகாண்டி வீரமலை யில் தவமிருந்த இடத்தையும் சொன்னர்கள், வீரமலேச்சாரலும்,படுகளமும், பைந்தமிழர் வீசமும் எங்கள் இதயத்தில் ஏற்றிய புத்துணர்ச்சியோடு சூன்றுடையான் தலை நகர் வாங்கலைப் பார்க்கப் புறப்பட்டோம், காவேரிக்கரையில், கரும்பும், கெல்லும், வாழையும், தென் அனயுமாக வயல் சூழ்ந்த பகுதியில், தனியிடத்தில் குன்றுடை யானும் தாமரை நாச்சியும் கட்டிய பத்தினிக் கோயிலைக் கண் டோம்; அண்மையில் கண்டோம். மண்மேடாகிக்கிடக்த சூன்று கூையான் கோட்டையை பத்தினிக் கண்ணகியின் கோயிலே இப்பொழுது 'பழைய வாங்கலாயி' கோயில் என் கிருர்கள்.