பக்கம்:குப்பைமேடு.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஏற்ற உடை உடுத்துகிறார்கள். ஆனால் எங்கும் கல்வி ஒன்றுதான். அதே போலத்தான் புறத்தோற்றத்தில் வேறுபட்டு இருக்கலாம்; ஆனால் உள்ளீடு அனைத்தும் ஒன்றுதான்” என்கிறார்.

இப்படி சமத்துவநோக்கும் தேசியப் பார்வையும் ராசீ என்ற இந்த எழுத்தாளனை ஒரு சிறந்த தேசிய எழுத்தாளனாய் அடையாளம் செய்கிறது.

நகைச்சுவை

“மகன் பிறந்திருக்கிறான் நீங்கள் பிறர்க்கு அடிமையாகத் தேவை இல்லை” என்றார்.

“அவன் ஒருத்திக்கு அடிமையாவான்” என்றேன்; சிரிப்புத் தோன்றியது" - என்ற இடத்தில் மெலிதான நகைச் சுவை இழையோடுகிறது.

“வள்ளுவர் முதல் வைரமுத்து வரை” இக்காதலைப் போற்றி இருக்கிறார்கள் என்று தன் மாணவரை நினைவு கூர்வதும்.

அதிர்ச்சி என்ற நாவலில் “பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் சேர்க்கக் கொடுக்கிறது. வரதட்சணை. இங்கே கல்வி நிலையத்தில் சேர்க்கிறதுக்குத் தருவது டொனேசன். பெயரில் தான் வித்தியாசம்” என்றும்.

“நமது நாட்டின் இத்தகைய அவல நிலையை Donation is our Nation” என்றும் சாடுகிறார்.

இப்படி மனிதாபிமானமும் தேசியப் பார்வையும் கொண்ட இந்த நூல் சரிந்து கொண்டிருக்கும் இந்த சமுதாய அமைப்பை சரியாகக் கட்டுவதற்குச் சிறந்த நூலாகும் என்பது திண்ணம்.

அன்புடன்
மதுநெஞ்சன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/10&oldid=1112377" இலிருந்து மீள்விக்கப்பட்டது