பக்கம்:குப்பைமேடு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

99

அவர்கள் என்னை ஒரு வங்கியில் அதிகாரி என்று பார்த்ததே இல்லை. அங்குப் பணி செய்யும் தொழிலாளி என்றுதான் கருதுகிறார்கள்.

மூதாட்டி ஒருத்தி தான் தெரிசாவாக ஆக முடியும் என்று நினைப்பது தவறு. இளமையில் அத்தகைய தொண்டுள்ளம் மதிக்கத்தக்கதுதான்; எனக்கு எந்த மறுப்பும் இல்லை. என் தந்தையையும், தாயையும் நான் வற்புறுத்தத் தயாராக இல்லை.

இந்தப் பரந்த உலகில் எங்களுக்கு என ஒரு கூரை இருக்கத் தான் செய்யும். கிடைக்கத்தான் செய்யும். மற்றும் மணமான பிறகு பெற்றோர்கள் அரவணைப்பில் இருப்பது அநாகரிகமானது என்று படுகிறது. அவர்கள் விரும்பினாலும் ஒரே கூரையில் இருந்து கொண்டு அவர்களுக்கு இடையூறு உண்டாக்க விரும்பவில்லை.

நாட்கள் சில ஆகலாம். திங்கள் சில போகலாம். எப் படியும் மருமகளும், மாமியாரும் ஒத்துப் போக முடியாது. இன்றே ஒதுங்கிவிடுவது நல்லது.

அவர்கள் எங்களுக்கு ‘ஆசி’ கூறினால் போதும். வாழ்த்தட்டும் வெறுக்காமல் எங்களை வாழ விடட்டும் அது போதும். அவர்களுக்குப் பணி செய்ய வாய்ப்புகள் உள்ளன.

தயாளன் மறுமலர்ச்சி இல்லம் அழைக்கிறது. அவர் உண்மையான கிறித்துவர் என்று சொல்லிக் கொள்கிறார். அவர் ஒய்வு ஊதியம் பெற்றுக்கொண்டு இந்தக் கிறித்துவ மதிற் சுவருக்குள் அடைபட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. நாங்கள் குழந்தை பெற்றுத்தரும் வரை காத்தி ருக்கத் தேவை இல்லை. இவர்களுக்காக நாங்கள் குழந்தை பெற வேண்டும் என்று வற்புறுத்தத் தேவை இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/101&oldid=1115423" இலிருந்து மீள்விக்கப்பட்டது