பக்கம்:குப்பைமேடு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

109

ளுக்குக் களங்கம் உண்டாக்கக் கூடாது என்பதால் உண் மையை மறைத்தான். அவனைவிடச் சுருசுருப்பாக இருந்த அவன் நண்பன் ஒருவன் செய்த துரோகம்தான் அவன் வாழ்வைப் பறித்துக் கொண்டது. அவர்கள் கள்ள உறவு கணவனுக்குத் தெரிந் துவிட்டது என்பதால் தான் விசா ரணைக்கு ஆளாக விரும்பாமல் அவனைத் தனிமையில் ஆழ்த்திவிட்டு அவள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டாள். அது பின்னால் தெரிந்தது.

அவன் அப்படிப்பட்டவன் அல்ல;வரதட்சணை வாங்கு வதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டு மணக்களத்தில் அவன் கால் வைத்தவன். அவன் தன்மானம் மிக்கவன். பிறர் உழைப்பை நம்பி வாழ நினைக்காதவன்; கெட்ட செயலைச் செய்துவிட்டு மொட்டை பெட்டிஷன் போட்ட அவன் நண்பர் செய்த மட்டமான திட்டம் இது என்பது பின்னர்த் தெரிந்தது.

இறந்தவளுக்கும் அவளை அடைந்தவனுக்கும் படுக்கை அறை உறவு அவ்வப்பொழுது இருந்து வந்தது என்பது விசாரித்ததில் தெரிந்து கொண்டேன். விட்டு இருந்தால் அவளையும் வெட்டிவிட்டு இவன் செத்தவருள் ஒருவனாக வைக்கப்பட்டு இருப்பான். போலீசு இந்த வகையில் அவனைத் தடுத்து நிறுத்தியது. வேகம் குறைந்தது.சோகம் மறைந்தது. கவிழ்ந்துபோன பாலை மறுபடியும் குவளை யில் எடுக்க இயலாது. கொட்டியது கொட்டியதுதான்.

எல்லாம் யோசித்துப் பார்க்கையில் தான் சிறைப் பட்டதே மேல் என்ற முடிவுக்கு வந்தான். சேலை கட்டிய மாது அவள் என்பது நினைவுக்கு வந்தது. வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வளவு கொடுமையானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/111&oldid=1115440" இலிருந்து மீள்விக்கப்பட்டது