பக்கம்:குப்பைமேடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

ராசீ

'அந்த மன இயல்பு அவளுக்குத் தோன்றாமல் நடந்து கொண்டோம்' என்றாள்.

பட்டு மெத்தையில் புரளும்போது பட்டுப்போன பழமையைப் பற்றி அவள் நினைக்கத் தேவை இல்லை' என்று கூட்டினாள்.

'உங்கள் அந்தஸ்துக்கு அவர்கள் எப்படிப் பொருந் தும்; உங்கள் தாராள மனப்பான்மை யாருக்குமே வராது. அவள் அழகாக இருக்கிறாள். இருக்கலாம் எந்தப் பண மும் சொத்தும் எதிர்பாராமல் அவளை மருமகளாக ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் அது உங்கள் தனித் தன்மைதான்' என்றேன்.

"என் மகன் அவளையே கட்டிக் கொள்வேன் என்று உறுதியாக இருந்தான். அவன் சந்தோஷம் தான் என் சந்தோஷம்'

'உங்கள் நகைகளை யாருக்குத் தரப் போகிறீர்கள் ? .

'அவளுக்கு ஒரு பெண் பிறந்திருக்கிறது, அவளுக்குத்

தான

'உங்கள் பாசத்தை அவர்கள் புரிந்து கொள்ள வில்லையே'

'கசக்கி விட்டார்கள்; என்ன செய்வது; அவர்களை வசதியற்றவர்கள் என்று மறைமுகமாகத் தாக்கி விட்ட னர்; அது அவளைப் பாதித்து இருக்கிறது” என்றான்.

பொதுவாகப் பெண்கள் தாம் பெண்களுக்குப் பகை என்று மிகைபடுத்திப் பேசுவார்கள்; அது தவறு என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/136&oldid=1115583" இலிருந்து மீள்விக்கப்பட்டது