பக்கம்:குப்பைமேடு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

ராசீ

என்று அறிய முடிகிறது. அதைப் போலத் தான் இந்தக் கதையும் இருந்தது.

“காந்தி அவரால் தானே மகாத்மா ஆக முடிந்தது? அவர் இறுதியில் என்ன ஆனார்? சுட்டுக் கொல்லப் பட்டார். இவை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள்' என்றான்.

! நீ பார்த்த கதை என்னதான் முடிவு'?

'கதாநாயகன் நேர்மையாக வாழ இறுதிவரை போராடுகிறான். குழந்தை மருத்துவமனையில் கிடக் கிறது. கத்தியை வைத்து கொண்டு டாக்டர் மிரட்டு கிறார். இன்னும் நாலே நாளில் ஆபரேஷன் செய்யாவிட் டால் குழந்தையைப் பார்க்க முடியாது. அதற்குப் பத் தாயிரம் தேவை என்கிறார்.

மனைவி அவனைத் தொளைத்து எடுத்து விடுகிறாள். அவர் ஒரு சிறு தவறு செய்தால் நிறுவனத்துக்கு இலட்சத் துக்கு நஷ்டம். தனக்குப் பத்தாயிரம், கோடிக் கணக்கில் சொத்துடைய நிறுவனத்தில் இந்த இலட்சங்கள் ஒன்றும் பிரமாதமில்லை. இவர் தான் தவறு செய்தார் என்று கண்டுபிடிக்க முடியாது என்பதை அறிவுறுத்துகிறாள்'.

"என்னதான் ஆயிற்று?

'அவனால் தவறு செய்யவே முடியவில்லை.

'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்' என்பது பொய்யல்ல. அவரை எந்த அதிர்ச்சியும் மாற்றவில்லை அவர் தலையில் இடி விழுந்தாலும் அதை அவர் பொருட் புடுத்துவதாக இல்லை. மறுபடியும் ஒரு அரிச்சந்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/194&oldid=1116106" இலிருந்து மீள்விக்கப்பட்டது