பக்கம்:குப்பைமேடு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

ராசீ

கலந்து கொள்ள முடிந்தது. துக்கம் விசாரிப்பதில் அவர் ஊக்கங் காட்டினார்.

அவர் வீட்டைத் தேடிப் பிரமுகர்கள் யாரும் வருவது இல்லை. மாலை போட்டு மரியாதை செய்பவரும் இல்லை. அதிக நாற்காலிகள் இருந்தால் இடம் அடைத்துக் கொள்ளும். தேவைக்கு மேல் அவர் எதுவும் வளர்க்க வில்லை, தம் மீசையைத் தவிர. அது பாரதியின் கலாச்சாரமாகும். அதை மேற்கொண்டிருந்தார். அதில் அவருக்கு ஒரு கம்பீரம் தென்பட்டது. வீரம் அவர் விழி களில் ஒரம் காட்டியது. எதிலும் அவர் கடுமையானவர் என்பதை அந்த வீட்டில் மாட்டியிருந்த அவர் நிழற்படம் காட்டியது.

சோபா எதுவுமில்லை என்று தெரிந்தது. இருந்தது அதை மகளுக்குச் சீதனமாகக் கொடுத்து விட்டார் என்பது தெரிந்தது. அதைப்பற்றி டாக்டர் தந்த விவரம் பின் வருமாறு:

"என் அப்பா கொடுத்த வெள்ளிச் சாமான்கள், தட்டு முட்டு அனைத்தும் தூர தேசத்துக்குப் பயணம் போய் விட்டது. திரும்பி வராது. எல்லாம் அவர்கள் கேட்டார் கள். கொடுத்து விட்டோம். கொடுத்தவை அனைத்தும் வஞ்சகம் இல்லாமல் ஒன்று ஒன்றாகத் தொலைத்து விட்டார்கள்" என்று விளக்கினார்.

பதி இழந்தான். பாலகனை இழந்தான், நிதி இழந் தான். சதியைப் பிரிந்தான். விதி அவனை வாட்டியது. எனினும் தன் மானத்தை இழவாதவன் அரிச்சந்திரன். அவன் கதை நினைவுக்கு வந்தது. அவனை ஒரு பொய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/204&oldid=1116120" இலிருந்து மீள்விக்கப்பட்டது