பக்கம்:குப்பைமேடு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

219

எல்லாரும், எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்' என்று விளக்கம் தந்தான்.

'அவளுடைய கொள்கைப்படி கணவன், மனைவி என்ற உறவு ஏற்பட்ட பிறகுதான் இந்தப் பால் பேதங் கள் தேவைப்படுகின்றன. மற்றவர்களிடம் பழகும் போது இந்தப் பேதம் பார்க்கத் தேவையில்லை. பழகுவதற்கு இது தடை ஆகாது என்கிறாள். அவளை வைத்து எப்படி ச் சமாளிக்க முடியும்' என்று கேட்கிறான்.

'என் காதலி காயத்திரி இந்த நாட்டுப் பெண் தான். அவளும் டாக்டர் பெண் போலப் பலரிடம் விரும்பிப்பழகு கிறாள். என்றாலும் இந்த நாட்டுப் பண்பாட்டின்படி தன்னைத் தொடுவதற்கு அவள் இடம் கொடுக்கவில்லை. நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சாத செயல். இவை அவளிடம் காணப்படுகின்ற பண்புகள். அவளை எனக்குப் பிடித்திருக்கிறது' என் கிறான்.

இரண்டு பேருக்கும் என்னைப் பொறுத்தவரை அதிக பேதம் தெரியவில்லை. டாக்டர் பெண் கிடைத்தால் உண்மையிலே எங்களுக்குப் பெருமை. இவன் அறிய மாட்டான் அவள் அருமை. அவள் கிடைத்தால் மேல் என்று நான் என் கருத்தை என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அவளே வந்து காரில் இறங்கினாள். அது எனக்கு அதிசயம் உண்டாக்கியது. கும்பிடப் போன தெய்வம் வீட்டைத் தேடி வந்தது போல இருந்தது. உண்மையிலே இவன் அதிர்ஷ்டக்காரன் என்று அனுமானித்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/221&oldid=1116147" இலிருந்து மீள்விக்கப்பட்டது