பக்கம்:குப்பைமேடு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

23

தொழிலைவிடப் போவதில்லை என்று கேள்விப்பட்டேன். அவன் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள். அவனும் தயங்குவான்; தொழிலுக்கு மதிப்புத்தர வேண்டும் என்பது அவள் கொள்கை; அவன் அவள் அழகை மட்டும்தான் ஆராதிக்கிறான்; அவனது மயக்கம் நீடிக்குமா? நாளைக் குப் பணக்காரப் பெண் ஒருத்தி கிடைத்தால் அவன் மனம் மாறமாட்டானா? இதெல்லாம் அவன் எழுப்பிவிட்ட புதிர்கள்

அவனுடைய அப்பா பிடிவாதக்காரர். விட்டுக் கொடுக்க மாட்டார்! ஞானஸ்நானம் செய்து கொள்ளாத எந்தப் பெண்ணையும் அவர் தொடமாட்டார். இதைக் கவனித்து எழுதுங்கள்: கதை விறுவிறுப்பாகப் போகும்' என்று கூறினான்.

சார்! இந்த வீட்டு ஐயா இந்தக் குப்பைத் தொட்டியை எங்கேயாவது தூரப்போட வேண்டும் என்று கூறுகிறாராமே? அப்புறம் என் பிழைப்பு' என்றான்.

"எங்கு இருந்தாலும் வீட்டுப்குப்பை தெருவுக்கு வந்து தானே தீரும்'

'உங்களை நம்பித்தான் இங்கே வருகிறேன். அது கூட நீங்கள் அதிகம் கிழித்துப் போடுவது இல்லை என்று சொல் கிறீர்கள். என் பிழைப்புக் கெடக் கூடாது' என்றான்.

'வேறு எங்கே உனக்கு அதிகக் குப்பைக்காகிதம் கிடைக்கிறது'

'நடிகை ராணி வீட்டுக்குப் போவேன். அந்தக் குப்பைத் தொட்டியில் ரசிகர்கள் கடிதங்கள் நிறையக் கிடைக்கும்' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/25&oldid=1112800" இலிருந்து மீள்விக்கப்பட்டது