பக்கம்:குப்பைமேடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ராசீ

என் நண்பர் வக்கீல் என்னைத் தேடி வந்தார்.

'வீட்டில் தான் இருக்கிறீரா” என்றார்.

'என் மனைவி கட்டளை; பெரும்பாலும் வீட்டில்தான் இருப்பேன். சாயங்காலம் தான் வெளியே போவேன்' என்றேன்.

'இந்தக் காலத்துச் சினிமாப்படங்கள் ஒரே கொள்ளை-கொலை; வன்முறை தலைவிரித்து ஆடுகிறது'

என்று அலட்டிக் கொண்டார்.

"நீங்களும் அதை நம்பித்தானே பிழைக்கிறீர்கள்' என்றேன்.

'எதை?'

கொலை, கொள்ளை. குற்றம், இது தானே உங்கள் தொழில்' என்றேன்.

'கொன்னுட்டிங்க சார்' என்றார்.

"உங்கள் பாராட்டுக் கூடக் கொலையாகவே இருக் கிறதே என்றேன். 'கொன்னுட்டிங்க' என்ற சொல்தவிர

உங்களுக்கு வேறு எதுவும் அகப்படவில்லையே' என்றேன்.

அவர் சிரித்தார்.

'எங்கே இந்தப் பக்கம்' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/26&oldid=1112801" இலிருந்து மீள்விக்கப்பட்டது