பக்கம்:குப்பைமேடு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

33

"புடலங்காய் காய்த்தால் அது முடங்காமல் தொங்கித் தானே தீரவேண்டும். கத்தரிக்காய் காய்த்தால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும்; நாம் ஏன் அவசரப்பட

வேண்டும்' என்று விட்டு வைத்தேன்.

'மணமேடை என்ற பகுதியில் விளம்பரம் செய்ய லாமே என்றேன்.

"சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற விஷயங்கள் சுவரொட்டிகளுக்குக் கொண்டுவரத் தேவையில்லை' என்றார்.

"உங்களுக்கு நல்லது தானே! தேர்ந்தெடுக்க இது ஒரு வாய்ப்பு' என்றேன்.

'எந்தப்பெண் அழகு இல்லை என்று தைரியமாகச் சொல்லுவார்கள்! விளம்பரத்தில் வரும் மணப்பெண்கள் அனைவரும் பூரண அழகிகள்தான்' என்றார்.

'வீட்டு மனைக்கு அளவு தருவதுபோல் உயரம் எடை தருகிறார்கள், நிறம் கறுப்பு என்று எந்தப் பெண்ணையும் சொல்வதில்லை; சுமார் என்று கூறுவார்கள்; கிட்டே போனால் எட்டி உதைக்கும்; முன்பின் தெரியாத இடங் களில் மாட்டிக் கொள்வோம்; பழகித் தொடர்பு கொள் வதுதான் நல்லது" என்றார்.

"உங்க பையனுக்கு என்ன சார் குறைச்சல்? வங்கித் தொழில்; பட்டப்படிப்பு; பாட்டனார் சொத்து, திட்ட மிட்ட குடும்பம்; குடிக்கு ஒரே மகன்; நல்ல உயரம், சிரிக்க மாட் டான் அதுதான் அவனிடம் உள்ள மன்னிக்க முடி யாத குறை' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/35&oldid=1113007" இலிருந்து மீள்விக்கப்பட்டது