பக்கம்:குப்பைமேடு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

49

இந்தத் தேசத்தில் எதிலும் உறுதிப்பாடு இல்லை. அதன் பாதிப்புதான் இவன் அவலநிலை.

பிச்சை எடுக்கவில்லை; அதற்கு அவன் கைகால் முட மாகவில்லை. திருடவில்லை; அதற்குக் கூட்டுத் தேவைப் பட்டது. அது அவனுக்குக் கிடைக்கவில்லை.

பாரதநாடு பரந்த நாடுதான்; ஆனால் தடுப்புகள் அதிகம். மொழி தெரியாமல் மற்றொரு மாநிலத்தில் அடி வைக்க முடியாது. இனவெறி மற்றவர்களைக் குடியேற விடுவதில்லை. தமிழர்கள் கூலிகள் பம்பாயில் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இந்தி தெரியும் என் றாலும், அவர்கள் வறுமை அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது தமிழர்கள் அவர்கள் என்பதை. இது தான் இவன் பின்னணி என்றேன்.

அவர் அவனைப் பற்றிக் கேட்பதற்கு முன் இங்கு வருவதை அவனே நிறுத்திக்கொண்டான்.

'அவன் இங்கு வருவது இல்லையா?' என்று கேட்டார்.

'படித்தவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான்' என்று பொதுப்படை நியாயத்தை எடுத்து உரைத்தேன்.

அவனுடைய இளைய அணியினர் கோணியைச் சுமந்து கொண்டு நடுத்தெருவைவிட்டு ஒரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

'அவன் ஏன் வருவது இல்லை? எங்காவது வேலை கிடைத்து விட்டதா?' என்று வினா எழுப்பினேன் அந்த அணியினரிடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/51&oldid=1113226" இலிருந்து மீள்விக்கப்பட்டது