பக்கம்:குப்பைமேடு.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

 அவருடைய பல்வேறு நாவல்கள் வாழ்க்கையின் சமூகக் கோளாறுகளைக் குத்திக் கிழித்ததைப்போல இங்கே:

‘குப்பைமேடும்’ ‘சீற்றமும்’ ‘அதிர்ச்சியும்’ வாழ்க்கை நடப்பியல்களை முன்னுக்குப் பின்னான வாழ்க்கை முரண்பாடுகளை அரசியல் குற்றங்களை போலி வாழ்க்கைப் பூசல்களை மானிடத்தின் முன்போட்டு உடைக்கின்றன.

மூன்று குறு நாவல்களின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூலின் முதல் கதை- ‘குப்பை மேடு’

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப்போல ஒரு மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளியின் கையில் குப்பைமேடும்-கோபுரமாகிறது.

குப்பை மேட்டைக் கருப்பொருளாகக் கொண்டு அங்கே காகிதம் கூட்டும் ஒரு ‘பொறுக்கியை’ நாயகி ஆக்கி எல்லாத் தொழிலும் மேன்மைஆனதே என விளக்குகிறார்.

குப்பைமேட்டை கோபுரம் காதலிக்கிறது. சமன்பாடுகளே உடன்பாடுகள் என ரா.சீ. அங்கே போதிக்கிறார்.

பொதுவாக ரா.சீ.யினுடைய எல்லா நாவல்களைப் பார்க்குமிடத்தும்-அவருடைய நாவல்களில் கதைச் சம்பவங்கள்- நிகழ்ச்சிகள் சொற்பமாகவே அமைந்துள்ளன.

ஆனாலும் கதைப் போக்கினைக் கூடவே நின்று அலசும் ஒரு ‘கதாபாத்திரம்’ உடன் வந்துகொண்டே இருக்கிறது. ‘அது’

சமகால நிகழ்வுகளை- மனோ நிலைகளை - வாழ்க்கை எதார்த்தங்களை- முரண்பாடுகளை நடப்பியல்களை - போலிகளை அடையாளம் காட்டுகிறது. அதோடு தீர்வும் காண்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/6&oldid=1112326" இலிருந்து மீள்விக்கப்பட்டது