பக்கம்:குப்பைமேடு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

65

என்னிடம் எங்களோடு அவளை மருமகளாக நாங்கள் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்று வற்புறுத்தக்

. [iئي IT سـn Lئ

'அதனால் நீங்கள் உங்கள் மகனை இழக்கிறீர்கள். அவனிடம் அவளை ஒப்புவிக்கிறீர்கள்"

'அது அவன் முடிவு செய்ய வேண்டியது. எப்படியும் அவர்கள் பின்னால் வேறுபாடுகளை விளைவித்து வெளி யேறத்தான் போகிறார்கள். இப்பொழுதே வேறுபாடு களைக் காட்டி உள்ளே அடியெடுத்து வைக்காமல் தள்ளி வைப்பதுதான் தக்கது' என்றார்.

அவர் கூறியதிலும் நியாயம் இருப்பதாகப்பட்டது. சிந்திக்க வேண்டியது தான்.

அவர் விடை பெறுகிறார்.

"நான் சொன்னது நினைவு இருக்கிறதா?’ என்று மறு படியும் கேட்டார்.

‘'எது?"

'குப்பைத் தொட்டி"

அது அவரை விடாது என்று தெரிந்தது.

- 15

அவர் வீட்டுக்குள் இடி இடித்தது; மின்னல் வீசியது. இருவரும் மாறி மாறிப் பேசியது என் வீட்டுவரை எட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/67&oldid=1113448" இலிருந்து மீள்விக்கப்பட்டது