பக்கம்:குப்பைமேடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

71

தாய்மை நம்மைச் சேய்மைப்படுத்திவிட்டது என்று நினைக்கிறேன். காற்றோட்டமும் நீரோட்டமும் உடைய காவிரிக் கரை உன் சுக வாசஸ் தலத்துக்கு உறுதுணை செய்யும் என்று கருதுகிறேன்; என்றாலும் அண்ணா நகர் அண்ணாநகர்தான். அது கதைப் பிரசித்தி பெறும் இடம் ஆகிக்கொண்டு இருக்கிறது. சொந்த விஷயத்தை விட்டு வந்த விஷயத்துக்குவருவோம்.

இன்று வன்முறை எழுத்துக்கள் பரவிவிட்டன. கொலை துப்புத்துலக்குதல் கடத்தல் இவற்றை வைத்துக் கதை எழுதி எழுதித் துப்பாக்கிக் கலாச்சாரத் திற்குக் கொண்டுவந்து விட்டனர். எழுதுகிறவன் நம்பி னான். இப்படி எழுதினால்தான் வாசகர்கள் படிக்கிறார் கள் என்று. அது மூட நம்பிக்கை என்பதை உணர்கிறேன். இவன் எழுதும் எழுத்து வாசகர்களை உருவாக்கிவிட்டது. அவர்கள் இவனை உருவாக்கிக் கொண்டு வருகிறவர்கள். அதே தாக்கம் தான் படங்களும்; இதைக் கண்டு மருளத் தேவை இல்லை. அந்த வாசகர்களையும் திருப்ப முடியும். திருத்த முடியும். ஆனால் நாம் சொல்லும் விஷயங்களைப் பொறுத்து இருக்கிறது.

இன்றைய வாழ்வைப் படம் பிடிப்பது துடிப்புள்ள எழுத்து. நோய் நாடி அதன் காரணம் நாடி மருந்தும் சொல்வது தான் எழுத்து. காலத்துக்கேற்ற கருவிகள் உற்பத்தி ஆகின்றன; அதேபோன்றுதான் இன்றைய வாழும் மனிதன் உயரும் இடங்களைச் சுட்டிக் காட்டி அவனுக்குப் பாதை வகுப்பது சாத்தியமானால் அது வெற்றி தான். முழுப்பாதை அமைக்க முடியாமல் போக லாம். தனிப்பாதையாவது அமைக்கத் துணிவு வேண்டும். என்னைத் தொடர்ந்து சிலர் நடப்பார்கள். அது ஒற்றை யடிப் பாதையாகவாவது உருவெடுக்கும். அந்தப் பணியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/73&oldid=1114134" இலிருந்து மீள்விக்கப்பட்டது