பக்கம்:குப்பைமேடு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ராசீ

போகிறோம். அப்பொழுது நாம் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்; வாய்ப்பு இருக்கிறது.

வீண் வாதம், வரட்டு கவுரவம் விதைத்தவரைத் தூண்டி விடலாம். என் மன நிம்மதியைக் கெடுக்க நினைக் கலாம்.

இந்தக் குழந்தை தனக்குத்தான் பிறந்தது; அதனால் தன்னிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுக் கலாம். தந்தை என்று விண்ணப்பங்கள் நிரப்பும் இடங் களில் அவருக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது என்று பிடிவாதம் பிடிக்கலாம், அப்பொழுது நீங்கள் அதைப் பற்றி மனம் குலையக் கூடாது. நிதானம் தவறக் கூடாது.

வழக்குகளுக்கு அஞ்சி அல்லது செல்வாக்குகளுக்குப் பயந்து விட்டுக்கொடுக்க என்னை வற்புறுத்தக் கூடாது. விவாகரத்து என்று வரும்போது அந்தக் குழந்தையைப் பற்றிய பதிவுகளும், உறவுகளும் முற்றும் அறுந்து விட்டன என்பதுதான் பொருள். அதனால் அவர் எந்த உரிமையும் கொண்டாட முடியாது. சட்டம் அவர் பக்கம் சாயாது. சாய்ந்தாலும் நீங்கள் சாயாமல் இருந்தால் போதும். அதைத் துணிந்து விரும்பி ஏற்றுக்கொள்பவன் தான் அறி வாளி; வாழ்க்கையின் அனுபவம் அச்சடித்த ஏடாக ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடி யாது. மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படலாம். இயற்கைக்கு மாறுபட்டது அல்ல.

எந்த ஜீவனும் தாய் யார் என்றுதான் கவலைப்படு கிறது, தாயைச் சுற்றித்தான் அதன் ஆரம்ப வாழ்க்கை தொடங்குகிறது. தந்தை' என்று ஒருவனைத் தேடுவதே இல்லை. உங்களுக்கு அந்தப் பொறுப்புக் காத்துக்கிடக் கிறது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/78&oldid=1114141" இலிருந்து மீள்விக்கப்பட்டது