பக்கம்:குமண வள்ளல்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

குமணவள்ளல்

அரசனுடைய ஏவலின்படி வந்தவர் தட்டை எடுத்து நீட்டினார். புலவர் அதைப் பார்த்தார்; அதை அளித்தவர் முகத்தைப் பார்த்தார்: “அதை அப்படியே வையுங்கள்” என்றார். அந்த அதிகாரிக்கு ஒன்றும் விளங்கவில்லை; தடுமாறினர்.

“இதை எனக்குக் கொடுக்கும்படி உங்கள் அரசர் சொன்னாரா?” என்று பெருஞ்சித்திரனார் கேட்டார்.

“ஆம், தங்களைச் சந்திக்க முடியாததற்கு வருந்தினார். இந்தப் பரிசிலை வழங்கும்படி கட்டளையிட்டார்.”

“அப்படியா? நான் இதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்று அவர் எப்படி அறிந்துகொண்டாரோ?”

பெருஞ்சித்திரனார் சற்றுப் பெருமிதத்துடன் பேசினார். அவர் பேச்சிலுள்ள உறுதியைக் கண்டு அதிகாரி அஞ்சினார்.

“மன்னர் பெருமான்....” என்று அவர் எதையோ சொல்ல வந்தார். புலவர் அவரைப் பேச விடவில்லை.

“மறுபடியும் வந்தால் பார்க்கலாம் என்று சொன்னார்? நான் அருகில் உள்ள ஊரிலிருந்து வரவில்லை. குன்றும் மலையும் பல பின் ஒழிய நெடுந்துாரத்தைக் கடந்து வந்திருக்கிறேன். நான் புலவனாதலால் இந்த வள்ளலைக் கண்டு இவர் வழங்கும் பரிசிலைப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்றுதான் வந்தேன். ஆனால் பரிசிலை இத்தகைய முறையில் பெறுவதற்காக நான் வரவில்லை. என்னிடம் கருணை கூர்ந்து, இதைப் பெற்றுக்கொண்டு போகட்டும் என்று எதைக் கொண்டு சொன்னாரோ அறியேன். அவர் முகத்தைக் கண்டு அவரோடு அளவளாவி அவருடைய அன்பாகிய பரிசிலைப் பெற்றுப் பின்னரே இத்தகைய பரிசிலைப் பெற விரும்பினேன். இப்போது நான் அவரைக் காண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/10&oldid=1361513" இலிருந்து மீள்விக்கப்பட்டது