பக்கம்:குமண வள்ளல்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

27

துய்த்தலை மந்தியைக் கையிடுஉப் பயிரும்
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ!

[1]

[வானை எட்டும்படி மூங்கில் வளரும் மலைப்பக்கத்தில் சுரபுன்னைகளோடு உயர்ந்து வளர்ந்து ஈரப் பலாவோடு அழகு பெற்று நின்ற பலா மரத்தில், ஆசைப்பட்டு வந்து முள்ளைப் புறத்திலே உடைய பழுத்த பழத்தைப் பெற்ற ஆண் குரங்கு, பஞ்சு போன்ற மயிரைப் பெற்ற தலையையுடைய தன் மனைவியாகிய பெண் குரங்கைக் கை காட்டி அழைக்கும், தளராத புதிய புதிய பொருள்களாகிய வருவாயை உடைய முதிரம் என்னும் மலைக்கு உரியவனே!]

இப்படிப் பாடிவிட்டு மேலே குமணனை வாழ்த்திப் பாட்டை நிறைவேற்றினார் புலவர்.

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகதி ஏந்திய வேலே.

[2]

[இவ்வுலக முழுவதும் பரந்து விளங்கும் சிறப்பையும் இயலும் தேரையும் உடைய குமணனே! புகழால் மேம் பட்ட நின்னுடைய வண்மை ஓங்குக! அதனோடு பகைவரினிடையே நீ ஏந்திய வேல் மேம்பட்டு விளங்குக!]

அவனுடைய வள்ளன்மையாகிய ஈரத்தையும், வீரத்தையும் வாழ்த்திப் பாடி முடித்தார் புலவர்.


  1. விசும்பு - ஆகாயம். கழை - மூங்கில். சிலம்பு - மலைப் பக்கம். வழை - சுரபுன்னை. ஆசினிக் கவினிய - ஈரப் பலாவோடு சேர்ந்து வளர்ந்து அழகு பெற்ற, ஆர்வு உற்று ஆசைப்பட்டு. கடுவன் ஆண் குரங்கு துய் - பஞ்சு போன்ற மயிர். மங்கி - பெண் குரங்கு. கையிடுஉ-கையைக் காட்டி பயிரும் அழைக்கும். அதிரா - தளராத, யாணர் - புதிய வருவாய்.
  2. இவண் - இவ்விடம்; என்றது உலகத்தை. இயல்தேர் - ஓடும் தேர். இசை - புகழ். மேந்தோன்றிய . மேலாக விளங்கிய, வண்மையொடு வேல் மேம்படுக. இது புறநானுாற்றில் 158-ஆம் பாடலாக இருக்கிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/33&oldid=1362540" இலிருந்து மீள்விக்கப்பட்டது