பக்கம்:குமண வள்ளல்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளிமானும் இளவெளிமானும்

53

வர்களைப் போற்றி ஈயும் பண்புடையவன் என்று தெரிய வந்தது. அவன் ஊருக்குச் செல்லும் வழியையும் தெரிந்துகொண்டார்.

ஒரு நாள் பெருஞ்சித்திரனார் வெளிமானை நாடிப் புறப்பட்டார். அவனை அடைந்தபோது அவனும் மிக்க அன்புடன் வரவேற்ரான். குமணனுக்கு வேண்டியவர் அவர் என்பதை அவன் தெரிந்துகொண்டிருந்தான். அ“முதத்தைச் சுவைத்தவர்கள் பிறிதொன்றை நாட மாட்டார்கள். குமணனை நண்பனாகப் பெற்றவர்கள் வேறு இடத்துக்குப் போவதில்லை. நீங்கள் கருணை கூர்ந்து என்னிடம் வந்தீர்கள். இதனால் எனக்குத் தான் பெருமை” என்று பணிவோடு சொன்னன். குமணனைக் காட்டிலும் முதியவன் வெளிமான். அவனுடைய நல்லியல்புகளை அறிந்து அவனோடு புலவர் பழகினார்; பாடினார்; பரிசிலும் பெற்றார். புலவருடைய பழக்கம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதினான் வெளிமான். அவன் புலவருக்கு விடை கொடுத்து அனுப்பியபோது, ஒன்று சொல்ல விரும்புகிறேன். தங்களிடத்தில் எனக்கு இருக்கும் அன்பைத் தாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அது ஒன்றையே கருதி இங்கே அடிக்கடி வந்து தங்களுடன் அளவளாவும் இன்பத்தை எனக்கு அளிக்க வேண்டும். நான் கொடுக்கும் சிறிய பொருளை நினைந்தால் தங்களுக்கு இங்கே வரத் தோன்றாது. இங்குள்ளவர்கள் யாவருமே தங்களிடம் அன்புடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. தமிழ் அருமை தெரியாத பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் சில சமயம் தங்கள் மனத்துக்கு உவப்பல்லாத காரியங்களைச் செய்யலாம். அவற்றையெல்லாம் பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/59&oldid=1362588" இலிருந்து மீள்விக்கப்பட்டது