பக்கம்:குமரப் பருவம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

குமரப் பருவம்

உயரமாக இருப்பான். ஆனால், முதலில் குள்ளமாகத் தோன்றிய சிலர் இந்த வயதில் திடீரென்று வேகமாக வளர்ந்து நல்ல் உயரம் பெறுவதும் உண்டு.

        மலர்ச்சி யெய்தத் தொடங்கும் பருவத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக வேறுபாடு உண்டு என்று கூறினேனல்லவா? ஆண்களுக்குள்ளேயும் இதிலே வேறுபாடு உண்டு; பெண்களுக்குள்ளேயும் உண்டு. எல்லா ஆண்களும் அல்லது எல்லாப் பெண்களும் ஒரே வயதில் மலர்ச்சி யெய்தத் தொடங்குவதில்லை என்பதையும் மறுபடியும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
        பையன்கள் மலர்ச்சி.யெய்தத் தொடங்கும் வயதைப் பற்றி ராம்சே என்பவர் அமெரிக்காவிலே விரிவாக ஆராய்ச்சி செய்தார். பத்து முதல் பதினாறு வயதுவரையுள்ள பலரை ஆராய்ந்து அவர் புள்ளி விவரம் தயாரித்தார். அவருடைய ஆராய்ச்சியின் பயனாகக் கீழ்க்கண்ட அட்டவணையிற் காட்டியுள்ளதுபோல விவரங்கள் கிடைத்தன.
      உடல் வளர்ச்சியும் மாறுதல்களும்:
            விந்து         குரல்           இரவு         மலர்ச்சி

வயதுத் சுரத்தல் மாறுபாடு ஸ்கலீதம் ரோமம் தொகுதி சதவிகிதம் சதவிகிதம் சதவிகிதம் சதவிகிதம்

 10        1.8            0.3          0.3          0.3
 11        6.9            5.6          3.7          8.4
 12       14.1           20.5          5.3         27.1
 13       33.6           40.0         17.4         36.1
 14       30.9           26.0         12.9         23.8
 15        7.8            5.5         13.9          3.3
 16        4.9            2.0         16.0          1.0

குறிப்பு :-இந்த விவரம் அமெரிக்க மனத்தத்துவப் பத்திரிகையில் ஜீ.வி.ராம்சே எழுதியுள்ள 'பையன்களின் இனப்பெருக்கத் திறமை வளர்ச்சி’ என்ற கட்டுரையிலிருந்து எடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/11&oldid=1230322" இலிருந்து மீள்விக்கப்பட்டது